தேர்வு
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையில் உதவி இயக்குநர் பதவிக்கான தேர்வு நவம்பர் 5ஆம் தேதி நடை பெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு.
முகாம்
சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் வரும் 26ஆம் தேதி தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது.
தணிக்கை
கடந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்த ஆவணங்களை சிறப்பு தணிக்கை மேற்கொள்ள பதிவுத் துறை உத்தரவு.
ரத்து
வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 1,500க்கும் அதிகமான வழக்கற்று போன தொன்மையான சட்டங்கள் ரத்து செய்யப்பட உள்ளன என ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தகவல்.
முதல் முறை
இந்தியாவின் மிகப்பெரிய ராக்கெட் ‘எல்விஎம்-3' 36 செயற்கை கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. வர்த்தக ரீதியாக இஸ்ரோ செலுத்திய முதல் ராக்கெட் இதுவாகும்.
ஆய்வு
பசிபிக் கடல் மீது கூட்டமாக பறக்கும் சில பொருள்கள் வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டுகளா என ஆய்வு செய்ய நாசா சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.
No comments:
Post a Comment