திருச்சி, அக். 2 காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருச்சியில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சங்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு
1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும். 70 வயது நிறைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்வு அளிப்பதாக தெரிவிக்கப்பட்ட வாக்குறுதியை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
No comments:
Post a Comment