நேர்மையின் குறியீடு:பெரியார்
கி.தளபதிராஜ்
காங்கிரசின் கதர் நிதியை களவாடி விட்டாராம் பெரியார். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவாள் பாட்டனும் பூட்டனும் அவிழ்த்துவிட்ட பொய் மூட்டையை மீண்டும் இப்போது சந்தைக்கு கொண்டுவர முயற்சித்திருக்கிறார் ஒரு பேர்வழி.
1935 ஆம் ஆண்டு பூனாவிலிருந்து வெளிவந்த ‘மராட்டா’ என்ற பத்திரிகை திலகர் சுயராஜ்ய நிதியை திருடியதாக ஒரு சில காங்கிரஸ்காரர்களின் பட்டியலை வெளி யிட்டு இருந்தது.
ராஜகோபாலாச்சாரியார் அட்வான்ஸ் தொகையாக வாங்கிய 19,000 ரூபாய் ஸ்வாஹா! பிரகாசம் பந்துலுக்கு கொடுக்கப் பட்ட 10,000 கடன் தொகை அபேஷ்! என ஏழு குற்றச்சாட்டுகளை அது அடுக்கியிருந்தது.
பெரும்பாலான குற்றச்சாட்டுகளில் பார்ப் பனர்களுக்கு தொடர்பு இருந்ததால் அவா ளுக்கு ஆதரவாக வேட்டியை வரிந்து கட்டி பதில் அளிக்க முனைந்தது தினமணி.
“ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து செல விட்டதில் ஏதோ சில தொகைகளை திரும்ப கொடுக்க முடியாமல் சில காங்கிரஸ்காரர்கள் கஷ்டப்படலாம். ஆனால், மோசம் செய்ய வேண்டும் என்று எடுத்துக் கொள்ளவில்லை. தேசத்திற்காக சகலத்தையும் தியாகம் செய்த சில தேச பக்தர்கள் கையில் சில ஆயிரம் ரூபாய்கள் செலவாகிவிட்டதால் மூழ்கிப் போவது ஒன்றுமில்லை” என்று எழுதியது.
மகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டியின் காரியதரிசியாய் அநேக ஆண்டுகள் இருந்த தோழர் பி.வி.மகாஜனோ, ‘சுயநலக் கடலில் மூழ்கி மறைந்தது ஒரு கோடி ரூபாய்!’ என்று விளக்கமளித்திருந்தார். அதையும் குடிஅரசு எடுத்து வெளியிட்டது.
‘ஆச்சாரியார் தம்மிடம் கொடுக்கப்பட்டு உள்ள பணத்திற்கு கணக்கு விவரங்களையும், மீதப் பணத்தையும் திரும்ப கொடுத்து விட் டதை ரிப்போர்ட்டுகளில் பார்க்கலாம்‘ இதில் ஊழல் ஒன்றுமில்லை என்பதாக தினமணி எழுதியது.
அப்படி ‘ரிப்போர்ட்’ எதுவும் எழுதப்பட வில்லை என்பதுதான் மாஜி காங்கிரஸ் காரியதரிசி தோழர் மகாஜன் அவர்களுடைய குற்றச்சாட்டு! ரிப்போர்ட்டுகள் எழுதப்பட்டது உண்மையானால், அந்த ரிப்போர்ட்டுகளை தினமணி பிரசவிக்கட்டும்! என சவால் விட்டது குடிஅரசு.
“முட்டாள்களின் பணத்தை மோசக்காரர் கள், வஞ்சகர்கள் வசூலித்து வயிறு வளர்ப்பது இயற்கை என்றாலும், அந்தப் பணமானது மற்ற சாதுக்களுக்கும் உண்மையான தொண்டு புரியவர்களுக்கும் இடையூறாக இருக்குமா னால் இனியும் மக்களை ஏமாற்றி வசூலிக் காமல் இருப்பதற்கும், முட்டாள்கள் மோசம் போகாமல் இருப்பதற்கும் வேண்டிய முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியது உண்மை யான ஊழியர்களின் கடமை அல்லவா?” என்றும் குடிஅரசு எழுதியது.
1922, 23, 24, 25ல் காங்கிரஸில் இருந்த பார்ப்பனர்களான டாக்டர் ராஜன் சாஸ்திரி யார், எம்.கே.ஆச்சாரியார், சந்தானம் அய்யங் கார், சுப்பிரமணியம் முதலியவர்களும் மற்றும் சேலம் பார்ப்பனர்கள், திருநெல்வேலி பார்ப்பனர்கள், சென்னைக்காரர்கள் முதலிய சகல பார்ப்பனர்களும் தாங்கள் வாங்கிய பணத்திற்கு சரியான கணக்கு கொடுத் தார்களா? எவ்வளவோ ஆயிரம் ரூபாய் இவர்கள் பேரிலிருந்து சரியான வகையும் பொறுப்பும் தெரியாமல் வசூலிக்க முடியாமல் வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு ஆயிரம் ஆயிரமாய் வரவு வைத்து செலவு எழுதப்பட்டதை சுட்டிக்காட்டி, இந்த கூட்டத் தில் சேராமல் இன்று எந்த காங்கிரஸ் பார்ப் பனராவது யோக்கியமாய் இருக்கிறார்களா? என்றும் கேட்டது.
மற்றும் எத்தனையோ பார்ப்பனர்கள் கதர்க்கடையில் இருந்து பணம் பச்சையாக திருடிக் கொண்டு போய் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் நடத்தாமல் விடப்பட்டிருக் கிறது என்பது பொய்யா? என்று குடிஅரசு கேள்வி எழுப்பியது.
குடிஅரசின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்ற ஒரு காங்கிரஸ் பத்திரிகை பெரியார் கதர்நிதியை சரிவர ஒப்படைக்கவில்லை என்றும், ஆதிநாராய ணன் எழுதிய கணக்கு அறிக்கையை பார்த் தால் ஈ.வெ.ரா யோக்கியதை வெளியாகும் என்றும் எழுதியது.
இதைத்தான் இப்போது இணையதளத்தில் மீண்டும் வாந்தி எடுத்திருக்கிறார் ஒரு பேர் வழி. கதர்நிதியில் ஊழல் செய்ததால் தான் காங்கிரஸிலிருந்து பெரியார் வெளியேற்றப் பட்டதாக உளறியிருக்கிறார்.
ஆதிநாராயணன் பெரியார் மீது குற்றம் சுமத்தி அறிக்கை விட்ட பிறகுதான் பெரியார் மாகாணக் காங்கிரஸ் கமிட்டி காரிய தரிசியா கவும், காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும், மாகாண கான்ஃபரன்ஸ், ஜில்லா கான்ஃபரன் ஸுகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட கான்ஃப ரன்ஸுகளுக்கு தலைவராகவும், கதர் போர் டுக்கு 5 வருட தலைவராகவும் தேர்ந்தெடுக் கப்பட்டார் என்பதெல்லாம் இந்த பேர் வழிக்குத் தெரியுமா?
பெரியார்மீது குற்றம் சுமத்திய அந்த ஆதி நாராயணன் யார்?
“ஈரோட்டைப் பொறுத்தவரை கதர் நிதி தொடர்பாக 500 ரூபாய் விஷயமாக எந்த நபரிடம் பாக்கி இருந்ததோ அந்த நபரை காரியதரிசியாக இருந்த சந்தானம் அய்யங் காரே பல தடவை நேரில் சந்தித்து பகுதி வசூல் செய்து, பகுதி வசூல் செய்யாமல் அலட்சியமாய் விட்டுவிட்டார்” என்று நடந்த விஷயத்தை உண்மை நிலவரத்தை எடுத்து ரைத்தது. இந்த 500 ரூபாயைத்தான் இணை யக் காணொளியில் ஏழாயிரத்து அய்நூறு என்று இப்போது கயிறு திரித்திருக்கிறார் இந்த ஆசாமி.
வைக்கத்தில் தீண்டாமையை எதிர்த்து பெரியார் கடுமையாக போராட்டத்தில் ஈடுபட்டபோதும், சத்தியாகிரக பணத்திற்கு அவர் முறையான கணக்கு காட்டவில்லை என்ற இதே புரளியை சில பார்ப்பனர்களின் தூண்டுதலால் அப்போதும் கிளப்பினர்.
வைக்கம் சத்தியாகிரகத்திற்கு அட்வான் சாக பெறப்பட்ட ஆயிரம் ரூபாயில் 700 ரூபாய் வைக்கம் சத்தியாகிரக காரியதரிசியி டம் கொடுத்ததையும், மீதம் 300 ரூபாயில் பாலக்காடு சவுதி ஆசிரமத்திற்கு கதருக்கு பஞ்சு வாங்கி அனுப்பியதையும், அது போக மீதி நூற்றுச் சில்லரை ரூபாய் கோர்ட்டார் சத்தியாகிரகத்திற்கு கொடுக்கப்பட்டதையும் ரசீதுகளோடு, தான் காங்கிரஸ் காரியால யத்திற்கு அனுப்பியதையும், அதை அவர்கள் தவற விட்டு விட்டு மீண்டும் கணக்கு கேட் டதால் தான் மறுபடியும் ஒருமுறை கணக்கு களை ரெஜிஸ்டர் தபாலில் அனுப்பியதையும் விளக்கி பொய்யர்களின் வாயை அப்போதே அடைத்தார் பெரியார்.
கதர் நிதி 500அய் இந்த ஆசாமி ஏழா யிரத்து அய்நூறு என்று திரித்ததுபோல் அன்றைக்கிருந்தவர்கள் சத்தியாகிரக அட் வான்ஸ் பணம் ஆயிரத்தை பத்தொன்பதா யிரம் என்று சொன்னார்கள்.
“தமிழ்நாட்டில் இன்று நடைபெற்றுவரும் கதர் இயக்கம் ஈ.வெ.ரா வினாலேயே பலம டைந்தது. அவர்தாம் கதரை காங்கிரசோடு பிணைத்தார். காங்கிரஸ் கதர் வஸ்திரால யங்கள் அவரால்தான் ஏற்படுத்தப்பட்டன. அதுவரை தனிப்பட்ட வியாபாரிகள் கொள் ளையடித்து வந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் பெரியார்!” என்று நவசக்தியில் எழுதினார் திரு.வி.க.
பார்ப்பனர்களின் கொள்ளையைத் தட் டிக்கேட்ட பெரியார் மீது ஊழல் குற்றச் சாட்டை ஏவிவிட்டது பார்ப்பனீயம். அவர்க ளது பாச்சா அன்று பலிக்கவில்லை. பெரியார் மீது குற்றச்சாட்டை வைத்த ஆதிநாராயணன் தான் பின்னாளில் அந்தப் பதவியிலிருந்தே தூக்கி எறியப்பட்டார்.
அன்றைக்கே செல்லுபடியாகாத அந்த அண்டப் புளுகை மீண்டும் செல்போன்களில் உலவவிட்டு நோட்டம் பார்க்கிறார்கள்.
பெரியார் ஈரோடு நகரசபை தலைவராக இருந்த போது எந்தக் கட்சியில் இருந்தார்? வெள்ளைக்காரனுக்கு ஆதரவாக அவர் செயல்பட்டதால் அளிக்கப்பட்டதுதான் சேர்மன் பதவி என்றெல்லாம் வாய்க்கு வந்ததை உளறிக்கொண்டிருக்கிறார்.
நீதிக்கட்சிக்கு போட்டியாக காங்கிரஸில் இருந்த பார்ப்பனரல்லாத தலைவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சென்னை மாகாண சங் கத்தின் துணைத்தலைவராக1917ஆம் ஆண் டிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர் பெரியார்!
அன்னிபெசன்ட் அம்மையாருக்கு எதி ராக இராஜகோபாலாச்சாரியாரும் விஜயராக வாச்சாரியும் சென்னையில் உருவாக்கிய நேஷனல் அசோசியேஷன் அமைப்பில் தமிழ்நாடு காரியதரிசியாக இருந்தவர் பெரியார்!
ஈரோடு நகரசபைக்கு தலைவராக மக் களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பெரியார். பெரியார் ஈரோடு நகரசபை தலைவராக இருந்தபோது ராஜாஜி சேலம் நகர சபைத் தலைவராக இருந்தார். பெரியாருக்கு வெள் ளைக்காரர்களால் பதவி வழங்கப்பட்டது என்றால் ராஜாஜிக்கு பதவி யாரால் கிடைத் தது? பெரியார் ஒருபோதும் பதவியை நாடி சென்றவரில்லை. தன்னைத் தேடிவந்த பதவி களை எல்லாம் துச்சமாக நினைத்தவர் பெரியார்.
“ஒத்துழையாமை சட்டவிரோதமானது. அதை அடியோடு ஒழித்துவிட வேண்டும்!” என்று வெள்ளைக்காரனுக்கு யோசனை சொன்ன சீனிவாச அய்யங்கார் போன்ற கங்காணி பரம்பரையில் பிறந்தவரல்ல எம் பெரியார்.
ஒத்துழையாமை இயக்கத்தில் பணிபுரிய வேண்டி ஈரோடு சேர்மன் பதவியிலிருந்து பெரியார் விலகிய போது ‘ராவ்பகதூர் பட்டம்‘ சிபாரிசு செய்யப்பட்டிருப்பதாகவும் சேர்மன் பதவியை விட்டு விலகவேண்டாம் எனவும் ராஜாஜி கேட்டுக்கொண்டும் அதற்கு இணங் காமல் பதவியை விட்டு விலகியவர் பெரியார்.
கொண்ட கொள்கையில் நேர்மையாக பணியாற்றியவர். கள்ளுக்கடை மறியலின் போது தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டி சாய்த்தவர்.
சீனிவாச அய்யங்காரைப் போல காங்கிரஸில் இருந்துகொண்டே கோர்ட்டை புறக்கணிக்காமல் வழக்காடி பணம் சேகரித்த வரில்லை.
தன் குடும்பத்திற்கு வரவேண்டிய 50,000 ரூபாய் சொந்த பணத்தை இழந்தவர். இருபத் தெட்டாயிரம் ரூபாய்க்கு இருந்த ஒரு அட மான பத்திரத்தை ஒத்துழையாமை காரண மாய் கோர்ட்டுக்கு போய் வசூலிக்க பெரியார் விரும்பவில்லை. காங்கிரசுக்கு தலைவராய் இருந்த சேலம் விஜயராகவாச்சாரியார் இதைக் கேள்விப்பட்டு, “இந்த பத்திரத் தொகைக்காக தாவா செய்ய உங்களுக்கு இஷ்டம் இல்லையானால் நீங்கள் அதை எனக்கு மேடோவர் செய்து கொடுத்து விடுங்கள். நான் இனாமாகவே வாதாடி வசூல் செய்து தருகிறேன். அந்தப் பணத்தை அடைய உங்களுக்கு இஷ்டம் இல்லை யானால் வசூல் செய்ததும் அதை திலகர் சுயராஜ்ய நிதிக்காவது கொடுத்துவிடலாம்.” என்று பெரியாரிடம் வலியுறுத்திக் கேட்டார். ஆயினும் அவர் அதற்கு இணங்கவில்லை. அவ்வளவு பெரிய தொகையை மனதார இழந்தார்.
“நானே வழக்காடுவதும் ஒன்றுதான். உங்களிடம் எழுதிக் கொடுத்து வழக்காடச் செய்வதும் ஒன்றுதான் இது என் கொள்கைக்கு ஒத்ததல்ல! கொள்கையே பெரிது! பணம் பெரிதல்ல!” என்று விஜயராகவாச்சாரியிடம் மறுத்தவர் பெரியார்!
பெரியாருக்கு முதலமைச்சர் பதவி கூட ஒரு கட்டத்தில் தேடி வந்தது. அனைத்தையும் ஒதுக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடியவர் பெரியார். தன் சொத்துகள் முழுமையும் இந்த இயக்கத்திற்கு பயன்படவேண்டி அதற்கான ஏற்பாட்டை செய்தவர் பெரியார்.
பார்ப்பனர்கள் அவிழ்த்து விட்ட புளுகு மூட்டைகளை மீண்டும் சந்தையில் உருட்ட இப்பேர்வழிகள் பெற்ற கூலி நிர்ணயம்தான் என்னவோ? பிழைக்க ஆயிரம் வழிகள் இருக்க இந்த கேடுகெட்ட பிழைப்பு ஏனோ?
நாகாக்க வேண்டும்!
No comments:
Post a Comment