மேட்டுப்பாளையம் மாவட்ட கழக கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

மேட்டுப்பாளையம் மாவட்ட கழக கலந்துரையாடல்

மேட்டுப்பாளையம், அக். 28- மேட்டுப்பாளையம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 27.-10.-2022 வியாழன் மாலை 6.30 மணிக்கு மேட்டுப்பாளையம் வசந்தம் ஸ்டீல்ஸ்சில் நடைபெற்றது. 

பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம்  ஆகியோர் விடுதலை சந்தா சேர்ப்பில் இலகுவாக இலக்கை அடைவது எப்படி, கிராம பிரச்சாரம், அமைப்புப் பணிகள் குறித் தும் விளக்கமாக உரையாற்றினார்கள்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய "ஆர்.எஸ்.எஸ் எனும் டிரோஜன் குதிரை நூல்" அறிமுக கூட்டங்களை பொதுவெளியில்  நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது என வும், மேட்டுப்பாளையம் கழக மாவட் டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிகளில் ஆதரவா ளர்கள், தோழமை இயக்கத்தினர், சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரையும் சந்தித்து விடுதலை சந்தா இலக்கை முடித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90-ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கி மகிழ்வது எனவும்,  டிசம்பர்-2 சென்னையில் நடைபெறும் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவிலும், டிசம்பர்-17 திருப்பத்தூரில் நடைபெறும் முப்பெரும் விழாவிலும் குடும்பத்துடன்  பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்பட்டது.

மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி, நகரத் தலைவர் பழனிச்சாமி, நகர செயலாளர் சந்திரன், உத்திரிநாதன், நந்தகுமார், மணி, குருசாமி மாவட்ட இளைஞரணி தலைவர் வீரமணி, இரா வணன்பிரதீப், காரமடை அ.மு.இராஜா, லியாகத்அலி, வேணுகோபால், ரெங்க சாமி உள்ளிட்ட கழகத்தோழர்கள் கலந்துகொண்டு  கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகளை செயல்படுத்திட உழைப்போம் என உரையாற்றினார்.

No comments:

Post a Comment