கோபி, அக். 28- கோபிசெட்டிப்பாளை யம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 27-.10.-2022 வியாழன் காலை 10.30 மணிக்கு கோபி சீனி வாசன் இல்லத்தில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பு செயலா ளர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர் ‘விடுதலை' சந்தா சேர்ப்பில் இல குவாக இலக்கை அடைவது எப் படி, கிராமபிரச்சாரம், அமைப்பு பணிகள் குறித்தும் விளக்கமாக உரையாற்றினர்.
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய ஆர்.எஸ்.எஸ் எனும் டிரோஜன் குதிரை நூல் அறிமுக கூட்டங்களை பொது வெளியில் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனவும்,
கோபிச்செட்டிப்பாளையம் கழக மாவட்டத்தில் உள்ள அந்தி யூர், கோபிச்செட்டிப்பாளையம், பவானிசாகர் உள்ளிட்ட (3) சட்ட மன்ற தொகுதிகளில் ஆதரவாளர் கள் தோழமை இயக்கத்தினர் சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரையும் சந்தித்து விடுதலை சந்தா இலக்கை முடித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90-ஆம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக வழங்கி மகிழ்வது எனவும் டிசம்பர்-2 சென்னையில் நடைபெறும் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவிலும், டிசம் பர்-17 திருப்பத்தூரில் நடைபெறும் முப்பெரும் விழாவிலும் குடும்பத் துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யபட்டது.
மாவட்டத் தலைவர் ந.சிவ லிங்கம், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், மண்டல செயலாளர் பெ.இராஜ மாணிக்கம், காப்பாளர் இரா.சீனி வாசன், பொதுக்குழு உறுப்பினர் யோகானந்தம், மண்டல இளை ஞரணி செயலாளர் வெற்றிவேல், மண்டல மாணவர் கழகச் செயலா ளர் சிவபாரதி, மாவட்ட மாணவர் கழக தலைவர் சூர்யா, நகரத் தலை வர் ஆனந்தராஜ், ஒன்றிய செயலா ளர் சிவக்குமார்,கதிரவன், அ.அஜித் குமார், சக்தி ஒன்றிய அமைப்பாளர் ஜி.கே.மூர்த்தி, ஆசிரியர் விஜய சங்கர், மாவட்ட ப.க செயலாளர் கே.எம்.கருப்பண்ணசாமி, விஸ்வ நாதன், சுதாகர், கருப்புசாமி உள் ளிட்ட கழகத்தோழர்கள் கலந்து கொண்டு கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவுகளை செயல்படுத்திட உழைப்போம் என உற்சாகமாக உரையாற்றினர்.
இரங்கல்
கோபி இராஜமாணிக்கத்தின் £ழ்விணையர் கிருஷ்ணவேணி மறை விற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது
விடுதலை சந்தா வழங்கல்
மண்டல செயலாளர் கோவி பெ.இராஜமாணிக்கம் 10 ஆண்டு விடுதலை சந்தா ரூ20,000 வழங்கி மகிழ்ந்தார்.
No comments:
Post a Comment