நாகர்கோவில், அக். 21- குமரி மாவட்ட கழக அலுவலகமான நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத் தில் குமரி மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன் னிலை வகித்து உரையாற்றினார். கழக தொழிலாளரணி மாநில செயலாளர் திருச்சி எம். சேகர், கழக மாநில அமைப்புச் செயலா ளர் மதுரை வே. செல்வம் ஆகி யோர் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து சிறப்புரையாற்றினர். பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் பெரியார்தாஸ், மாவட்ட கழக அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், கழக தோழர்கள் உசிலம்பட்டி சிவா, மு.குமரிச் செல்வர், முத்துவைரவன், கன் னியாகுமரி கிளைக்கழக அமைப் பாளர் க.யுவான்ஸ், மாநகர துணைத் தலைவர் கவிஞர் ஹ. செய்க்முகமது பங்கேற்றனர். கழக இலக்கிய அணி செயலாளர் பா. பொன்னுராசன் நன்றி கூறினார்.
கழகத் தோழர்கள், பெரியார் பற்றாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். மறைவுற்ற கழகத் தோழர் நாகர்கோவில் சு.இராஜ கோபால் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாருடைய கருத்துகளை உலகிற்கு கொண்டுசேர்க்கும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுடைய பிறந்த நாளான டிசம்பர் 2 அன்று குமரி மாவட்டத்தில் எழுச்சியுடன் கொண்டாடுவது எனவும், கழக தலைமைச் செயற்குழு கூட்டத் தீர்மானங்களை குமரி மாவட் டத்தில் செயல்படுத்துவது என வும், குமரிமாவட்ட சார்பாக மாவட்டம் முழுமையாக சென்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மன்ற தலைவர்கள் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களை சந்தித்து விடுதலை நாளிதழுக்கு அதிகமான சந்தாக் களை சேர்த்து வழங்குவது எனவும் இக் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டன.
No comments:
Post a Comment