அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் கிராமசபை கூட்டத்தில் சட்ட மன்றத் தலைவர் அப்பாவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 3, 2022

அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் கிராமசபை கூட்டத்தில் சட்ட மன்றத் தலைவர் அப்பாவு

திருநெல்வேலி, அக்.3 கிராமப் பகுதிகளில் அரசுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று கிராமசபை கூட்டத்தில் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார் 

காந்தி பிறந்த நாளையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள 204 கிராம பஞ்சாயத்துகளில் நேற்று கிராமசபை கூட்டங்கள் நடை பெற்றது. பாளையங்கோட்டை யூனியன் நொச்சி குளம் பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டார். ஆட்சியர் விஷ்ணு, சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன்  பாளையங் கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ்.தங்க பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆட்சியர் அப்பாவு பேசுகையில் கூறியதாவது:- அரசுத் திட்டங்கள் கிராம சபை கூட்டத்தில், பஞ்சாயத்து பகுதியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் அனைத்து தரப்பு மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் பொதுமக்கள் பார்வைக்கு ஒளிவு மறைவு இன்றி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். கிராமப் பகுதிகளில் பொதுமக்கள் நலன் கருதி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000, காலை உணவு திட்டம் ஆகியவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. வருகிற மழைக்காலத்தில் மழை நீர் தேங்காத வகையில் சுகாதார துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். தாமிரபரணி சுத்தம் சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதிகள் போன்றவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. கடைகளுக்கு செல்லும் போது துணிப் பைகளை எடுத்து செல்ல வேண்டும். தாமிரபரணி ஆற்றில் துணிகள், பிளாஸ்டிக் பொருட்களை போடக்கூடாது. ஆற்றை சுத்தமாக வைத்து கொள்வது நம் அனைவரின் கடமை ஆகும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, வேளாண்மை இணை இயக்குநர் அசோக்குமார், பஞ்சாயத்துகளின் இணை இயக்குநர் அனிதா, பாளையங் கோட்டை தாசில்தார் ஆனந்த பிரகாஷ், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், பஞ்சாயத்து தலைவர் வேலம் மாள் சீனிவாசன், துணைத்தலைவர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். கண்காட்சி கூட்டத்தில் கிராம நிர்வாக செலவினம், பொது திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை பொது மக்கள் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெறப்பட்டது. அங்கு ஊட்டச் சத்து தொடர்பான கண்காட்சி, சுகா தாரக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தன.


No comments:

Post a Comment