சட்டம் வழங்கும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது : உயர்நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 3, 2022

சட்டம் வழங்கும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை ஏற்க முடியாது : உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை,அக்.3  சட்டம் வழங்கும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது. எனவே பிணையில் வந்து தலைமறைவானவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஜெய பிரகாஷ் என்பவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "என் மீது விருதுநகர் மாவட்டம் வீரசோழன் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த மாதம் 11-ஆம்  தேதி என் மீது பிணையில் வெளிவரமுடியாத பிடியாணை பிறப்பிக் கப்பட்டுள்ளது. அந்த பிடியாணையை திரும்பப் பெறுமாறு விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சத்திகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் மீனாட்சி சுந்தரம் ஆஜராகி, மனுதாரர் சம்பந்தப்பட்ட வழக்கின் முதல் குற்றவாளியாக சேர்க்கப் பட்டுள்ளார். இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சி விசாரணை தொடங்க இருந்தபோது மனுதாரர் தலைமறைவாகிவிட்டார். நிலு வையில் உள்ள வழக்கு விசாரணைக்கு அவர் ஒத்துழைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வரு மாறு:- குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 482இ-ன் அதிகாரத்தை மனுதாரர் தவறாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது.  அந்த வகையில் மனுதாரர் தனக்கு விதித்த நிபந்தனையை மீறியுள்ளார். இந்த வழக்கில்  சம்பந்தப்பட்டவர்கள் தலைமறை வானது மட்டுமல்லாமல், வழக்கின் சாட்சிகளுக்கு தொந்தரவும் அளித்து வந்துள்ளனர். எனவே இந்த மனுவை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே உச்சநீதிமன்றத் தின் உத்தரவின் பேரில் மனுதாரர் மீது உரிய நடவடிக்கையை வீரசோழன்  காவல்துறை எடுக்கலாம். இந்த மனு தள்ளுபடி செய்யப் படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


No comments:

Post a Comment