ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*போட்டியாளர்கள் போட்டியில் இருந்து விலகியதை அடுத்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

* ஒடிசாவில் காளி தேவி கோயிலில் உள்ள சாமி சிலைக்கு தினசரி 'போகா' என்ற பெயரில் மீன் பிரசாதம் வழங்கும் பாரம்பரியம் 200 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதாக கூறப்படுகிறது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* நவம்பர் 5 மற்றும் 7 ஆம் தேதிகளில் டேராடூனில் திட்டமிடப்பட்ட “ஆகாஷ் தத்வா” மாநாட்டை நிறுத்துமாறு விஞ்ஞானிகளின் கூட்டமைப்பான இந்தியா மார்ச் ஃபார் சயின்ஸ் (அய்எம்எஃப்எஸ்) கருநாடக பிரிவு ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. நவீன விஞ்ஞான முன்னேற்றங்களுடன் பழங்கால அறிவியலின் ஞானத்தை இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்துவது முரணானது என விஞ்ஞானிகள் கடும் எதிர்ப்பு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment