தஞ்சை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

தஞ்சை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

 தஞ்சை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இலக்கை தாண்டி 

‘விடுதலை' சந்தாக்களை சேகரித்து தமிழர் தலைவர் பிறந்தநாள் பரிசாக வழங்கி மகிழ்வோம்! 

தஞ்சை, அக்.25 தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 22.10.2022  அன்று மாலை 6.30 மணி அளவில் தஞ்சாவூர் கீழராஜ வீதி பெரியார் இல்லத்தில் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் அமர்சிங் தலைமையேற்று உரையாற்றி னார். தஞ்சை மண்டல கழக தலைவர் மு.அய்யனார், தஞ்சை மாவட்ட கழக செயலாளர் அ.அருணகிரி ஆகி யோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். இந்நிகழ்வில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், கழக அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, ‘விடுதலை' சந்தா சேர்த்தல், கழக பிரச்சாரத் திட்டங்கள் குறித்து கருத்துரையாற்றினார்.

மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் சித்தார்த்தன், மாநில ப.க. துணைத் தலைவர் கோபு பழனிவேல்,மாநில பெரியார் வீர விளை யாட்டு கழக செயலாளர் ந. இராமகிருஷ்ணன், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் சடையார்கோவில் வெ.நாராயணசாமி, தஞ்சை மாவட்ட துணை செயலாளர் உத்தராபதி, தஞ்சை மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி, தஞ்சை மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு, தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் பா.சுதாகர், திருவை யாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், பூதலூர் ஒன்றிய தலைவர் அல்லூர் இரா.பாலு, ஒரத்தநாடு ஒன்றிய தலை வர் ஜெகநாதன்,தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் அரங்கராசன், ஒரத்தநாடு ஒன்றிய செய லாளர் மாநல்.பரமசிவம், பூதலூர் ஒன்றிய செயலாளர் இரா.புகழேந்தி, ஒரத்தநாடு ஒன்றிய துணைத் தலைவர் துரைராசு,  தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட், தஞ்சை மாநகர அமைப்பாளர் வன்னிப்பட்டு செ.தமிழ்ச்செல்வன், ஒரத்தநாடு நகரத் தலைவர் பேபி ரெ.ரவிச்சந்திரன், திருவையாறு நகர தலைவர் கவுதமன், மண்டல மகளிர் அணி செயலாளர் அ.கலைச்செல்வி,     மண்டல இளை ஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல்,  திருவை யாறு ஒன்றிய அமைப்பாளர் விவேக விரும்பி,  பகுத்தறி வாளர் கழகம் அ ஜெயராமன், மாநகர இளைஞரணி துணைத் தலைவர் பெரியார் செல்வம் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்.

 விடுதலை சந்தா வழங்கல்

இக்கூட்டத்தில் தஞ்சை வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் 7 ஆண்டு விடுதலை சந்தாக்களை ஒன்றிய தலைவர் பா.சுதாகர், ஒன்றிய செயலாளர் அரங்கராசு ஆகியோர் அமைப்பு செயலாளர் ஈரோடு த.சண்முகத் திடம் வழங்கினர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம்1:

    இரங்கல் தீர்மானம்

திருவையாறு ஆப்ரேட்டர் கோவிந்தராசுவின் மகன் மகேஷ் , ஒரத்தநாடு ஒன்றிய மேற்கு பகுதி செயலாளர் மண்டலகோட்டை இரா.மோகன்தாஸ் ஆகி யோரின் தந்தையார் இராமன், தஞ்சை பல் மருத்துவர் அன்புவின் மனைவி வெண்ணிலா ஆகியோரது மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்2:

தலைமை செயற்குழு கூட்ட தீர்மானங்களை செயல்படுத்துவது!

8.10.2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமை செயற்குழு கூட்ட தீர்மானங் களை ஏற்று செயல்படுவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 3:

தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது

தந்தை பெரியார் பிறந்த மண்ணில் மதவெறியைத் தூண்டி தமிழ்நாட்டை அமளிக்காடாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை முறியடிக்கும் வகையில் தஞ்சை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய ‘‘ஆர்எஸ்எஸ் எனும் டிரோஜன் குதிரை'' நூல் விளக்க தெருமுனை கூட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 4:

தமிழர் தலைவரின் 90 ஆம் ஆண்டு 

பிறந்த நாள் விழா!

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்தநாள் (டிசம்பர் - 2) விழாவினை சுயமரியாதை நாள் விழாவாக எழுச்சியுடன் கொண் டாடுவது எனவும், பிறந்தநாள் விழாவினை விளக்கி சுவர் எழுத்து விளம்பரங்களை செய்வது எனவும் முடிவு செய்யப்படுகிறது. டிசம்பர் 2 அன்று காலை சென்னை பெரியார் திடலில் கழகத் தோழர்களை கழகத் தலைவர் சந்திக்கும் நிகழ்ச்சியிலும், அன்று மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா நிகழ் விலும் அனைவரும் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 5:

‘விடுதலை' சந்தாக்களைத் திரட்டி...

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு திருவையாறு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள கழக ஆதரவாளர்கள், தோழமை இயக்கத்தினர், சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து ‘விடுதலை' சந்தாக்களை திரட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் பரிசாக வழங்கி மகிழ்வது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 6:

முதலிடம் பெற வைத்த தோழர்களுக்குப் 

பாராட்டு - நன்றி!

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘விடுதலை' ஆசிரியராக பொறுப்பேற்று 60 ஆண்டுகள் செய்த தொண்டிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 60,000 சந்தாக்களை திரட்டிடும் முயற்சியில் முதல் கட்ட சந்தா சேர்ப்பில் மாநிலத்தில் ஒன்றிய அளவில் முதலிடம் பெற்ற உரத்தநாடு ஒன்றிய கழக பொறுப்பாளர்களுக்கும், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற தஞ்சை மாவட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்களுக்கும் மாவட்ட திராவிடர் கழகம் பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 7:

திருப்பத்தூரில் நடைபெறும் 

முப்பெரும் விழாவிற்கு...

டிசம்பர் 17 அன்று திருப்பத்தூரில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள், ஏ.டி கோபால் அவர்களின் நூற்றாண்டு விழா, ‘விடுதலை' சந்தா வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழாவில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து தனி பேருந்தில் குடும்பத்துடன் சென்று பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.


No comments:

Post a Comment