அய்தராபாத்,அக்.31- டில்லி சிறப்பு போலீஸ் நிறுவன சட்டத் தின் கீழ் சிபிஅய் புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட்டு உள் ளது. இந்த சட்டத்தின்படி ஒரு மாநிலத்தில் சிபிஅய் விசாரணை நடத்த அந்த மாநில அரசு அனுமதி வழங்க வேண்டும். இதன்படி தெலங்கானா சார்ந்த பல்வேறு வழக்குகளில் சிபிஅய் விசாரணை நடத்த அந்த மாநில தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்த சூழலில் தெலங்கானா மாநி லத் தில் ஆளும் கட்சி எம்எல்ஏக்களை இழுக்க பேரம் பேசிய விவகாரம் தொடர்பான வழக்கு மாநில உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (29.10.2022) விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தரப்பு வழக்குரைஞர் கூறியதாவது:
தெலங்கானாவில் சிபிஅய் விசா ரணை நடத்துவதற்கான பொது அனுமதி திரும்பப் பெறப்பட்டுள் ளது. இதற்கான அரசாணை கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியிடப் பட்டது. இதன்படி சிபிஅய் விசா ரணை நடத்துவதற்கு ஏற்கெனவே வழங் கப்பட்ட அனுமதிகள் ரத்து செய் யப்பட்டு உள்ளன. இனிமேல் வழக்கின் தன்மையை பொறுத்து சிபிஅய் விசாரணைக்கு அனுமதி அளிப்பது குறித்து முடிவு எடுக்கப் படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment