"தத்தெடுத்த இணையரிடம் இருந்து குழந்தையை பிரிப்பதில் நியாயம் இல்லை" : மதுரை உயர்நீதிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 7, 2022

"தத்தெடுத்த இணையரிடம் இருந்து குழந்தையை பிரிப்பதில் நியாயம் இல்லை" : மதுரை உயர்நீதிமன்றம்

மதுரை, அக்.7 குழந்தை மீது அதிக அக்கறை கொண்டிருப்பதால், தத்தெ டுத்த இணையரிடம் இருந்து குழந் தையை பிரிப்பது நியாயமானதாக இருக்காது என்று மதுரை உயர்நீதி மன்றக்கிளை கருத்து தெரிவித்தது.  

 மதுரையைச்சேர்ந்த இணையர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் “நானும், என் மனைவியும் கடந்த 2020ஆ-ம் ஆண்டில் 10 மாத பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தோம். அந்த குழந்தையை சட்டவிரோதமாக நாங்கள் வைத்திருப்பதாக குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவில் புகார் அளிக் கப்பட்டது. அதன்பேரில் குழந்தையை கைப்பற்றி காப்பகத்தில் வைத்தனர். இதுகுறித்து காவல்துறையில் என் மீதும், என் மனைவி மீதும் வழக்குப் பதிவு செய்தனர். குழந்தையை எங்க ளிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி நாங்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த மதுரை உயர்நீதி மன்றக்கிளை எங்களின் கோரிக்கையை முறையாக விசாரித்து குழந்தையை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று சிறுவர் நீதிக்குழுமத்திற்கு 28.9.2020 அன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிறப்பித்து 2 ஆண்டுகள் ஆகி யும், இதுவரை குழந்தையை ஒப்படைப் பது பற்றி விசாரிக்கவே இல்லை. எனவே ஏற்கெனவே உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தி, குழந்தையை எங்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்”

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். தத்தெடுத்த இணையரின் இந்த வழக்கை நீதிபதிகள் நிஷா பானு, ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:- 

மனுதாரரின் உறவினர் தத்தெடுத்த குழந்தையை அவர்களிடமே ஒப் படைக்க இந்த நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்தது. சம்பந்தப்பட்ட குழந்தை மிகவும் துயரமான சூழ் நிலையை எதிர்கொண்டுள்ளது. இது குழந்தையின் தவறில்லை. இந்த குழந் தையை தத்தெடுத்தவர்கள் வாரத்திற்கு ஒருமுறை காப்பகத்திற்கு வந்து குழந் தையை பார்த்துச் செல்கின்றனர். ஆனால் குழந்தையை பெற்றெடுத்த வர்கள் இதுவரை வரவில்லை. தத்தெ டுத்த தம்பதி, குழந்தையின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளதை இது தெளிவாக காட்டுகிறது. எனவே இந்த இணையரிடம் இருந்து குழந்தையை பிரித்து வைப்பது நியாயமானதாக இருக்காது. இது குழந்தையின் நலனுக் கும் நல்லதல்ல. இதனால் மனுதாரர், அவரது மனைவி மீது காவல்துறையினர் பதிவு செய்த வழக்கை ரத்து செய்கிறோம். அவர்கள், காப்பகத்திற்கு சென்று குழந்தையை தங்கள் வசப் படுத்துவதற்கு தேவையான சட்ட நட வடிக்கைகளை முடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


No comments:

Post a Comment