முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்
சென்னை, அக்.7- ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் நிலைக் குழுவின் உறுப்பினர்களை நியமனம் செய்து ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், மக்களவை உறுப் பினர்கள் 17 பேரும், மாநிலங்களவை உறுப்பினர்கள் 10 பேரும் ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழுவின் உறுப்பினர்களாக நிய மனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழுவின் தலைவராக திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவர் கனிமொழி நியமிக்கப்பட் டுள்ளார்.
திமுக தலைவர் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் நிலைக்குழு தலைவராக நியமிக்கப் பட்டுள்ள கனிமொழி வாழ்த்து பெற்றார்.
No comments:
Post a Comment