சத்தியமங்கலம், அக். 30- சத் தியமங்கலத்தில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க பவானி ஆற்றின் குறுக்கே ரூ.11.77 கோடி செலவில் கூடுதலாக புதிய பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமானப் பணி விரைவில் தொடங்க உள்ளதாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர் பகுதி நாளுக்கு நாள் விரி வடைந்து வரும் நிலையில் நகர் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சத்தியமங் கலம் நகர் பகுதியின் நடுவே பவானி ஆறு ஓடு கிறது. நகரின் இரு பகுதி களை இணைக்கும் பவானி ஆற்று பாலம் மூலம் போக்குவரத்து நடை பெற்று வருகிறது. தமிழ் நாடு - கருநாடகம் இரு மாநிலங்களை இணைக் கும் திண்டுக்கல் - பெங் களூர் தேசிய நெடுஞ்சாலை யில் உள்ள சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலம் வழியாக தினந்தோறும் 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன.
மேலும் இப்பாலம் வழியாக அந்தியூர், பவானி, மேட்டூர், கோபி செட்டிபாளையம், ஈரோடு, மேட்டுப்பாளை யம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சத் தியமங்கலம் வழியாக சரக்கு வாகன போக்கு வரத்து மற்றும் பேருந்து போக்குவரத்து நடை பெற்று வருகிறது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலை யில் பொதுமக்கள் மற் றும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் சத்தியமங்கலம் பவானி ஆற்றின் குறுக்கே கூடுதலாக ஒரு புதிய பாலம் கட்டுவதற்கு மண் பரிசோதனை செய்யப் பட்டு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப் பட்டது.
இதைத்தொடர்ந்து புதிய பாலம் கட்ட அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு தற்போது டெண் டர் விடப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலம் இடிக்கப் பட்டு அதே இடத்தில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. ரூ.11.77 கோடி செலவில் 6 தூண்கள் கொண்ட புதிய பாலம் 11 மீட்டர் அகலத்தில் இரு வாகனங்கள் செல்லும் வகையில் கட்டப்பட வுள்ளது. தற்போது புதிய பாலம் கட்டுவதற்காக ஒப்பந்தப்புள்ளி விடப் பட்டுள்ளது. விரைவில் கட்டுமானப் பணி தொடங்கப்படும். பாலம் கட்டுவதற்கான உடன் படிக்கை கையெழுத்தா னவுடன் அதிலிருந்து 16 மாதங்களுக்குள் கட்டு மான பணி முடிக்கப்படும். புதிய பாலம் கட்டுமானப் பணி முடிந்த பின் சத் தியமங்கலத்தில் வாகனப் போக்குவரத்து நெரிசல் குறையும் என தெரிவித் தனர்.
பவானி ஆற்றின் குறுக்கே கூடுதலாக புதிய பாலம் கட்ட ஒப்பந்தப் புள்ளி விடப்பட்டுள்ள தால் வாகன ஓட்டிகள் மற்றும் சத்தியமங்கலம் நகர் பகுதி பொதுமக்கள் வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு மேற் கொண்டு வரும் நடவடிக் கைக்கு பாராட்டு மற்றும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
No comments:
Post a Comment