பயன்பாட்டுக்கு...
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடியில் கட்டப்பட்டு வரும் புறநகர் பேருந்து நிலையம் பொங்கலுக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் முத்துசாமி தகவல்.
மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ஆம் கட்ட வழித்தடம் 3இல் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளில், மாதவரம் பால் பண்ணை அருகில் சுரங்கம் தோண்டும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (13.10.2022) தொடங்கி வைத்தார்.
அரசாணை
மின் மோசடிகளை தவிர்க்க மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
உத்தரவு
தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகள் கிடைப்பதை தடுப்பது எப்படி என்பது குறித்து, ஒன்றிய, மாநில அரசுகள் தரப்பில் பதிலளிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தாக்கல்
நளினி, ரவிச்சந்திரன் விடுதலை பற்றி உச்சநீதிமன்றம் முடிவு எடுக்கலாம் என, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல்.
அதிகரிக்க..
மின்னணு வேளாண் சந்தை மூலம் பரிவர்த்தனை செய்யும் விவசாயிகள் மற்றும் வணிகர்களின் எண்ணிக் கையை அதிகரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உத்தரவு.
நிரந்தரமாக...
மக்கள் நலப்பணியாளர்களை நிரந்தரமாக பணியமர்த்த முடியுமா? என்பதை கூறும்படி தமிழ் நாடு அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
No comments:
Post a Comment