தெலங்கானா ராட்டிர சமிதி - பாரத் ராட்டிர சமிதி என பெயர் மாற்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 6, 2022

தெலங்கானா ராட்டிர சமிதி - பாரத் ராட்டிர சமிதி என பெயர் மாற்றம்

அய்தராபாத்,அக்.6- தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராட்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் பெயரை  பாரத் ராட்டிர சமிதி என்று மாற்றியது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அக்கட்சியின் தலைவரும், தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சருமான சந்திரசேகர ராவ் கடிதம் எழுதியுள்ளார்.

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து அய்தராபாத்தை தலைநகரமாக கொண்டு தனி தெலங்கானா மாநிலம் உருவானது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், டி.ஆர்.எஸ். கட்சி வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. 

நேற்று (5.10.2022) அய்தராபாத்தில் உள்ள தெலங்கானா பவனில் கட்சியின் உயர் மட்ட செயற்குழு கூட்டத்தை கூட்டி, தனது கட்சியின் பெயரை பாரத் ராட்டிர சமிதி (பிஆர்எஸ்) என்று மாற்றுவதாக தீர்மானம் கொண்டு வந்து நிறை வேற்றினார்.கட்சியின் பெயர் மாற்றம் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு சந்திரசேகர ராவ் கடிதம் எழுதி உள்ளார்.


No comments:

Post a Comment