ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு ஹிந்தியில் பெயரா? நீதிமன்றத்தில் வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 21, 2022

ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு ஹிந்தியில் பெயரா? நீதிமன்றத்தில் வழக்கு

மதுரை, அக்.21 ஒன்றிய அரசின் திட்டங் களுக்கு தமிழ் மொழியில் பெயர் வைக்கக்கோரி தொடரப் பட்ட வழக்கில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு மதுரை உயர்நீதி மன்றம் கடிதம் அனுப்பி உள்ளது. 

மதுரை திருச்செந்தூரை சேர்ந்த வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன் மதுரை உயர்நீதிமன்றத் தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை ஒன் றிய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களை செயல்படுத் தும் போது ஹிந்தியில்தான் பெயர் வைக்கிறார்கள். அந்த திட்டங் களை தமிழ்நாட்டில் அமல் படுத்தும் போது தமிழ்நாடு அரசின் ஆணை, விளம்பரங்கள் மற்றும் செய்திக்குறிப்புகளில் மேற்படி திட்டங்களை அப்படியே தமிழ் மொழியில் எழுதுகிறார்கள். உதாரணமாக 'பிரதான் மந்திரி முத்ரா யோஜனா' என்று தமிழில் எழுதுவதால் தமிழர்களுக்கு அதன் அர்த்தம் புரியாது. அதே போல் எல்.அய்.சி. நிறுவனம் தமது பாலிசிகளுக்கு ஹிந்தி பெயர் களைத்தான் வைக்கிறார்கள். பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஓடும் ரயில்களுக்கு வைகை, பாண்டியன், பொதிகை, செந்தூர் எக்ஸ்பிரஸ் என தமிழில் பெயரிட் டுள்ளனர். ஆனால் தற்போது அந்தியோதயா, துரந்தோ, தேஜஸ், சுவிதா என ஹிந்தி பெயர்களிலேயே தமிழ்நாட்டில் ரயில்கள் இயக்கப் படுகின்றன. எனவே மக்கள் அனை வரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், தமிழ்நாட்டில் செயல் படுத்தப்படும் திட்டங்களுக்கும், ரயில்களுக்கும் ஹிந்தி பெயர்களை பயன்படுத்தாமல் தமிழிலேயே பெயர்களை வைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று (20.10.2022) விசாரணைக்கு வந் தது. இந்த வழக்கு குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் சார்பில் பதில ளிக்க கடிதம் அனுப்பும்படி நீதி பதிகள் உத்தரவிட்டு, விசார ணையை ஒத்தி வைத்தனர்.


No comments:

Post a Comment