மாணவர்களைத் தாக்குவதா? சுங்கச்சாவடியினரை கைது செய்க! வைகோ கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 24, 2022

மாணவர்களைத் தாக்குவதா? சுங்கச்சாவடியினரை கைது செய்க! வைகோ கண்டனம்

சென்னை, அக். 24 ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆந்திராவில் சுங்கச்சாவடியினர் தமிழ்நாடு சட்டக்கல்லூரி மாணவர்களை கடுமையாக தாக்கி உள்ளனர். அவர்கள் காரில் பாஸ்ட்ராக்கில் பணம் இருந்தும்கூட, சுங்கச்சாவடி யில் இருக்கும் பாஸ்ட்ராக் சோதனை செய்யும் கருவி பழுது பட்டுள்ளதால், பணத்தை கட்டச்சொல்லி மிரட்டியுள்ளனர்.

அதற்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த தால், சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டைகள், கம்பிகளை கொண்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது கடுமையாக தாக்கி இருக்கின்றனர். இதில் மாணவர்கள் பலர் காயம் அடைந்தனர். சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, தமிழ்நாடு சட்டக்கல்லூரி மாணவர் களில் காயம்பட்டவர்கள் மீது ஆந்திர காவல்துறை வழக் குப்பதிவு செய்து உள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கி றேன்.

வழக்குகளை திரும்பப் பெறுவதோடு, இந்த தாக்குதலில் ஈடுபட்ட சுங்கச்சாவடியினர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைதுசெய்ய வேண்டும் என்றுவலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.


No comments:

Post a Comment