ஒன்றிய அரசு பணி பதவி உயர்வில் ஓபிசி இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சட்ட திருத்தம் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 30, 2022

ஒன்றிய அரசு பணி பதவி உயர்வில் ஓபிசி இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சட்ட திருத்தம் மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன்

சென்னை, அக். 30- ஒன்றிய அரசுப் பணி பதவி உயர் வில் இதர பிற்படுத்தப் பட்டோர் (ஓபிசி) பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் வகையில் அரசியல் சட் டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என திமுக மாநிலங்களவை உறுப்பி னர் பி.வில்சன் வலியு றுத்தி உள்ளார்.

இது தொடர்பாக ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு மாநி லங்களவை உறுப்பினர் வில்சன் எழுதியுள்ள கடி தத்தில் கூறப்பட்டுள்ளதா வது: உண்மையான சமூக நீதியை நிலை நாட்டுகிற வகையில் நிர்வாகத்தில் போதுமான பிரதிநிதித் துவத்தை உறுதி செய்ய வேண்டும். ஒன்றிய அரசு பணிகளில் பதவி உயர்வு களில் இதர பிற்படுத்தப் பட்டோர் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படு வது இல்லை. ஒன்றிய அரசு பணி பதவிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி பிரிவினர்) சீனியாரிட்டியு டன் கூடிய இடஒதுக்கீடு வழங்க வகை செய்ய வேண்டும். இதற்காக அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். ஏற்கெனவே அரசமைப்பு பிரிவு 16 (4A) மற்றும் 16 (4B) ஆகி யவை தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின ருக்கு ஒன்றிய அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்கிறது. ஆகை யால் இப்பிரிவில் இதர பிற்படுத் தப்பட்டோரை யும் சேர்க்க வேண்டும்.அரசமைப்பு பிரிவு 16 (4A) மற்றும் 16 (4B) ஆகி யவை தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்குகிறது. இதர பிற்ப டுத்தப்பட்டோருக்கு அப்படி இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதனால் சமூகத்தில் பின் தங்கியுள்ள இதர பிற் படுத்தப்பட்ட பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகையால்தான் அரசியல் சாசனத்தின் 16 (4A) மற்றும் 16 (4B) ஆகி யவற்றில் இதர பிற்படுத் தப்பட்ட பிரிவினருக்கு ஒன்றிய அரசு பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்ய திருத்தம் தேவை. இவ் வாறு திமுக மாநிலங்க ளவை உறுப்பினர் பி.வில் சன் வலியுறுத்தி உள்ளார்.


No comments:

Post a Comment