சென்னை, அக். 24- நெடுஞ்சாலை துறையில் கண் காணிப்பு பொறியாளர் கள் இரண்டு பேருக்கு தலைமை பொறியாள ராக பதவி உயர்வு வழங்கி பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறையில் சென்னை பெருநகர தலைமை பொறி யாளர் சுமதி விருப்பத்தின் பேரில் ஓய்வு பெற்றார். அதேபோன்று நெடுஞ்சாலை துறை திட்ட வடிவமைப்பு தலைமை பொறியாளர் விஜயா தமிழ்நாடு நெடுஞ்சாலை மேம்பாட்டு நிறுவன தலைமைப் பொறியாள ராக அயல் பணி அடிப் படையில் நியமனம் செய் யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இரண்டு பணியிடமும் காலியாக இருந்தது. இந்நிலையில் அந்தப் பணி யிடங்களுக்கு தற்போது கண்காணிப்புப் பொறியாளர் இரண்டு பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை செயலா ளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கண் காணிப்புப் பொறியாளர் சேகர் சென்னை பெரு நகர தலைமை பொறியா ளராகவும், நெடுஞ்சாலை துறை ஆராய்ச்சி நிலை யம் பயிற்சி இணை இயக் குநர் இளங்கோ நெடுஞ்சாலை துறை திட்டம், வடிவமைப்பு மற்றும் புல னாய்வுப் பிரிவு தலைமை பொறியாளராக நியம னம் செய்யப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment