சென்னை, அக். 30- சென்னை யில் மழைக்காலத்தின் போது நீர் தேங்காதவாறு பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஒரே நேரத்தில் மாநக ரம் முழுவதும் மழைநீர் வடிகால் பணிகள், கழிவு நீர் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள் நடை பெறுவதால், பல சாலை கள் முடக்கப்பட்டும், ஒரு வழிப் பாதையாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமை யான சிரமங்களை சந் தித்து வருகின்றனர்.
இதற்கிடையில் மழை நீர் வடிகால் பணிகள் இந்த மாதத்திற்குள் முடி வடைந்துவிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஏற்கெனவே உத்தர வாதம் அளித்திருந்தார். அதைத்தொடர்ந்து பணி கள் வேகமாக நடை பெற்று வருகின்றன.
ஆனால், இன்னும் முழுமையாக பணிகள் முடிவடையவில்லை. இந்த நிலையில், சென் னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை தலைமைச் செயலாளர் வெ. இறை யன்பு ஆய்வு செய்து வரு கிறார்.
தாம்பரம் மாநகராட் சியின் பம்மல், அனகா புத்தூர் பகுதிகளில் நடை பெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் நேரில் ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment