‘‘ஊசிமிளகாய்''
தமிழை வியாபாரம் செய்து ஒரு யோக்கியப் பொறுப்பற்ற நாவடக்கம் அறியாத ஒரு பார்ப்பான், அமெரிக்காவில் அவரது பருப்பு வேகவில்லை என்றவுடன், தமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தக வியாபாரத்தின்மூலம் தனது வாழ்வை நடத்தும் ஒருவர், தன்னை உலக மஹா அறிவாளி என்று திமிர்த்தனத்துடன், அறிஞர் அண்ணாவை - அவர் ஆரிய மாயை எழுதியவரல்லவா - என்ற அடிமனச் சிந்தனையை அகற்ற முடியாத ஓர் ஆணவப் பிறவி இழிசொல்லால் அர்ச்சனை செய்து, அப்படிச் சொன்னதால் தனக்கு மறுப்புமூலம் விளம்பர வெளிச்சம் கிடைக்கும் என்ற எண்ணத்தினால் கூறியிருப்பதை மற்றவர் சுட்டிக்காட்டியபோது, தான் சொன்னது சரிதான் என்ற தனது அகம்பாவத்தை மேலும் வெளிக்காட்டியுள்ளார்!
அண்ணாவின் கொள்கையை விமர்சிக்க எவருக்கும் உரிமை உண்டு. ஆனால், எந்தத் தலைவரையும் பண்புடன் பேசத் தெரியாதவனை எப்படி உலகம் பார்க்கும்!
தமிழ்நாட்டு காவல்துறையினர், தந்தை பெரியார் சிலையை அவமானப்படுத்தியவனையெல்லாம் ‘பைத்தியக்காரர்கள்' என்று சர்டிபிகேட் வாங்க வைத்து, வழக்கு முடித்த கதை போலத்தான் என்பதற்கே கூட இடமில்லாமல், தான் சொன்னதை உறுதிப்படுத்தியிருக்கிறான். காரணம், பண்புள்ள மக்கள் திராவிட சமுதாயத்தினர். வடபுலம் மாதிரி, ‘தலையை வெட்டி வா' என்று சொல்வார்களா? பகுத்தறிவு பூமியாயிற்றே, இது!
ஆனால், எதற்கும் ஓர் எல்லை உண்டு அல்லவா?
அதன் எதிர்வினையாகவே பேராசிரியர் சுப.வீ. போன்றவர்கள் கொதித்துள்ளார்கள்!
Every action has its own reaction என்பதை மறந்துவிட்டு, உடனே அதுபற்றி சீறி எழுந்துள்ள தமிழ்நாடு பிராமணர் சங்க நிர்வாகிகள் அதற்குக் கண்டனம் செய்கிறார்கள்!
‘‘யாரோ ஒருவர் சொன்னால் எல்லாரும், சொல்வதாக எடுத்துக் கொள்ள முடியுமா? ஒட்டுமொத்த பிராமண சமூகத்தினை, பூணூல்பற்றி இப்படி பேசலாமா?'' என்று கேட்டுள்ளனர்.
அதுபோல, ஆத்திரப்பட்டவர்கள் பலதரப்பட்டவர்கள் - ஆத்திரம் ஒரே மாதிரியாகவா இருக்கும்? என்றாலும், வன்முறையை நாம் ஒருபோதும் ஆதரிக்காதவர்கள்.
‘‘பூணூல் அறுப்பு இயக்கம் நடத்தினார் பெரியார்'' என்று சதா அறிக்கை விடுவார்கள். எந்த கமிட்டியில் பெரியார் தீர்மானம் போட்டு இப்படி ஒரு போராட்டம் நடத்தினார் என்று ஆதாரம் காட்ட முடியுமா என்றால், மவுனியாவார்கள்.
ஒரு சில நிகழ்ச்சிகள் ‘தன்னிச்சையாக' நடைபெற்று இருக்கலாம். அப்போதும் அதனைக் கண்டித்தவர் தந்தை பெரியார்.
கோட்சே என்ற மராத்திப் பார்ப்பான் காந்தியைக் கொன்றபொழுது, தந்தை பெரியார் நினைத்திருந்தால், பார்ப்பனர்களுக்கு எதிராக வன்முறையை வெடிக்க வைத்திருக்க முடியுமே, அப்படிச் செய்யவில்லை; மாறாக, உணர்ச்சிவசப்பட்டவர்களை அடக்கினார்; கண்டித்தார்!
எங்கோ சில Stray incidents மிகுந்த ஆத்திரமூட்டப்பட்ட நிலையில் நடந்தால்கூட, அதை ஆதரிக்கவில்லை. பூணூல் என்பது பேதத்தின் வெளிச்சம் என்றாலும்கூட!
ஒரு பொய்யையே திரும்பத் திரும்பக் கூறி, அது நாளடைவில் உண்மைபோல ஆகிவிடும் என்ற பார்ப்பனத் தனத்தின் வித்தை இது!
இதற்கு உடனே பதில் அறிக்கை தயாரிக்கும், சுப.வீ.மீது பாயும் ‘பிராமணோத்தமர்களே', அறிஞர் அண்ணாவைப்பற்றித் தரக்குறைவோடு பேசிய பார்ப்பனரின் கூற்றைக் கண்டித்து ஏன் ஒரு வார்த்தைகூட அந்த அறிக்கையில் இல்லை.
இதுதான் உங்கள் பண்பாடா? நனி நாகரிகமா?
கூறிய அவரைக் கண்டனம் தெரிவித்திருந்தால், தங்கள் வார்த்தைகளுக்குக் கடுகளவு மதிப்பாவது ஏற்படும்!
வீரமணிக்குப் பழனியில் பாடை கட்டித் தூக்கிச் சுமந்து ஊர்வலம் போன உங்கள் பண்புபற்றி உலகமே கைகொட்டி சிரித்ததை மறந்துவிட்டீர்களா?
காஞ்சிபுரம் கோவில் கருவறையில் தேவநாதன் அர்ச்சகர் ‘காம லீலை' நடத்தியபோது, என்றாவது நீங்கள் அதைக் கண்டித்திருந்தால், நீங்கள் வழிபடும் ‘கோவிலின் பெருமையை'யாவது அது உயர்த்தியிருக்குமே!
இது எப்படி இருக்கிறது என்றால், கிராமங்களில் சண்டை வரும்போது சொல்வார்கள் ஒரு கதை.
‘‘என் பெண் மகள் ஒரு மாதிரி; உங்கள் பிள்ளையை சற்று அடக்கி வை'' என்று கூறுகிற மாதிரி அல்லவா இருக்கிறது!
பெரியார் - அண்ணா - கலைஞர் - இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைப்பற்றி, திராவிடர் கழகம், தி.மு.க. போன்ற திராவிடர் இயக்கம்பற்றி யாராவது நீங்கள் தகாத சொல்லைக் கொட்டினால், திராவிடர்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்காதீர்கள்!
உங்களுக்கு ‘அனுமார், சுக்கிரீவன், விபீடணன்' பட்டாளம் இருந்தாலும், அவர்களும் கடைசிவரை உங்களோடு இருக்கமாட்டார்கள்.
பொய்க்கால் குதிரையில் சவாரி செய்ய முடியாது!
மக்கள் பொறுமையை - பெருந்தன்மையை பலவீனம் என்று நினைக்காதீர்கள்!
பூணூலை ஒரு கையில் ‘பிடித்துண்டு' ஓட்டுப் போடச் சொன்னார் எங்கள் இராஜாஜி என்று கிடந்து புலம்பும் பூதேவாளே, அவாள் ஏன் தி.மு.க.வுடன்தான் நடத்த விரும்பிய தேன் நிலவைப்பற்றி ‘தேன் நிலவு முடிந்தது' என்று 1967 இல் பதில் சொன்னார். (உண்மையில் அது தொடங்கவேகூட இல்லை) புரியறதோ - நன்னா புரிஞ்சுக்கோ!
‘ஊரு கெட நூலை விடு' என்ற பழங்கால பழமொழிதான் நினைவுக்கு வருகிறது!
No comments:
Post a Comment