டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
மோடி அரசின் எட்டாண்டு கால ஆட்சி குறித்த குற்றப்பத்திரிக்கையை தெலங்கானா டி.ஆர்.எஸ். கட்சி வெளியிட்டது.
தி டெலிகிராப்:
கடந்த சில நாட்களாக, கருநாடகாவில் முதல மைச்சரும், பாஜக தலைவருமான பசவராஜ் பொம் மையின் ஊடக தொடர்பு குழு, பத்திரிகையாளர்களை தேர்வு செய்ய தீபாவளி இனிப்புகளுடன் தலா ரூ.1 லட்சம் முதல் ரூ.2.5 லட்சம் வரை பணப்பட்டுவாடா செய்ததாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இது குறித்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரிக்குமா? என காங்கிரஸ் கேள்வி.
இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தலை சந்திக்கும் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் “லூட் கி சூட் (கொள்ளையடிக்கும் சுதந்திரம்)” என்ற முழக்கத்துடன் “குற்றப்பத்திரிகையை” வெளியிட்டது.
சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு ஒதுக்கீட்டுப் பலன்கள் 'தன்னிச்சையாக' மறுக்கப்பட்ட பின்னணியில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துவது குறித்த விவரங்களை வழங்குமாறு பல்கலைக்கழகங்கள் கேட்டுக் கொண்டன. அகில இந்திய ஓபிசி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி தொகுத்துள்ள தரவுகளின்படி, 23 என்எல்யுக்களில் 12, இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் ஓபிசிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை. 23 ழிலிஹி களில் எட்டு எஸ்.சி. மற்றும் எஸ்.டி..களுக்கு ஒதுக்கீடு சலுகைகளை வழங்கவில்லை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
சத்தீஸ்கர் மாநில அரசின் 58 சதவீத இட ஒதுக்கீடு ஆணை நீதிமன்றத்தால் ரத்து செயப்பட்டதை அடுத்து, தமிழ்நாடு, கருநாடகா மற்றும் மகாராட்டிரா ஆகிய மாநிலங்களில் இடஒதுக்கீடு முறையை ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமித்துள்ளது சத்தீஸ்கர் அரசு.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment