பா.ஜ.க.வினர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கலாம் : உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை,அக்.29 கோவையில் வருகிற 31-ஆம் தேதி பா.ஜ.க.வினர் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தினால், காவல்துறையினர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க லாம் என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் காரில் சிலிண்டர் வெடித்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பதிவான வழக்கை தேசிய குற்றப்புலனாய்வு முகமை விசாரணைக்கு தமிழ்நாடு அரசு மாற்றியது.
இந்நிலையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து கோவை மாவட்டத்தில் வருகிற 31-ஆம் தேதி (திங்கட்கிழமை) முழு அடைப்பு நடத்த பா.ஜ.க., சார்பில் அழைப்பு விடுக்கப்பட் டது. இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் வெங்கடேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பிரகாஷ் ஆஜராகி, "இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு காவல்துறையிடம் பா.ஜ.க., முறை யான அனுமதி பெறவில்லை. அனுமதியின்றி நடத்தப்படவுள்ள முழு அடைப்பு போராட்டத்தால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும். தொழில்துறையும் நஷ்டம டையும். எனவே, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என்று வாதிட்டார்.
இந்த வழக்கில் எதிர் மனு தாரராக உள்ள பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை தரப் பில் வழக்குரைஞர் ஆர்.சி.பால் கனகராஜ், ரபுமனோகர் உள்ளிட் டோர் ஆஜராகி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர். வழக் குரைஞர் பால்கனகராஜ் வாதிடும் போது, "முதலில் இந்த முழு அடைப்பு போராட்டத்தை பா.ஜ.க., மாநில தலைவர் அண் ணாமலை அறிவிக்கவில்லை. கோவை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், கார் வெடிப்பு சம் பவத்தை கண்டித்து பொதுமக்கள் முழு அடைப்பில் ஈடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். கார் வெடிப்பு சம்பவத்தை கண்டித்து முழு அடைப்பு நடத்துவதா? அல்லது வேறு என்ன வகையான போராட் டங்களை நடத்தலாமா? என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். மாவட்ட நிர்வாகிகளால் அறி விக்கப்பட்ட முழு அடைப்பை அங்கீகரிக்கவில்லை" என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், "முழு அடைப்பு போராட்டத்தை மாநில பா.ஜ.க., அறிவிக்கவில்லை என்று கூறப்படுவதால், கோவை யில் வருகிற 31-ஆம் தேதி பா.ஜ.க. வினர் முழு அடைப்பு போராட் டத்தை நடத்தினால், அவர்கள் மீது காவல்துறையினர் சட்டப் படி நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்கை வருகிற நவம்பர் 1-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்" என்று உத்தர விட்டனர்.
No comments:
Post a Comment