மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையத்தில் தந்தை பெரியாரின் 144ஆம் பிறந்தநாள் விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பேருந்து நிலையம் முன்பு தந்தை பெரியாரின் படம் அலங்கரித்து வைக்கப் ¢பட்டது. காலை 9:30 மணிக்கு விழா தொடங்கியது. மாவட்ட தலைவர் சு. வேலுசாமி தலைமை தாங்கினார். மேட்டுப்பாளையம் வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ப. முனுசாமி முன்னிலை வகித்தார்.
திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கா.சு. ரங்கசாமி, நகரச் செயலாளர் வெ. சந்திரன், மாவட்டக் காப்பாளர் சாலை வேம்பு சுப்பையன், சுந்தரமூர்த்தி, இங்கர்சால், வெள்ளிங்கிரி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் வீரமணி, மேடூர் முரு கேசன், ரங்கசாமி, லியாகத்அலி, குருசாமி, பா. பால சுப்ரமணியன், ணிஙி காலனி மணி, திருவள்ளுவன், ரங்கராஜ், மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், நந்தகுமார், காரமடை ஒன்றிய கழகத் தலைவர் ஏ.எம். ராஜா, தமிழ் புலி உள்பட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.
அதனையடுத்து மேட்டுப்பாளையம் குமரபுரம் பகுதியில் செல்வராஜ் தலைமையில் மாவட்டத் தலைவர் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங் கினார். காந்திபுரம் பகுதியில் சாலைவேம்பு சுப்பை யன் கொடியேற்றினார். சந்திரன் இனிப்பு வழங் கினார்.
மேடூரில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் தோழியர் அம்சவேணி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். சாலைவேம்பு பகுதியில் பொதுக்குழு உறுப்பினர் சாவித்திரி சுப்பையன் தலைமையில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ் வில் தி.முக. தோழர்கள், கழகத் தோழர்கள் துளசி யம்மாள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண் டனர்.
இராமேகவுண்டன் புதூரில் பத்மனாபன் அவர்களும், கீழ்சத்தியூரில் ராமசாமி அவர்களும் இராமம்பாளையத்தில் செல்வம் அவர்களும் தந்தை பெரியார் படம் வைத்து இனிப்புகள் வழங்கினர்.
கோவை
நிறைவாக மதியம் ஒரு மணிக்கு காரமடை கண்ணார்பாளையம் பகுதியில் இந்து முன்னணியினரால் தாக்குதலுக்கு உள்ளான தந்தை பெரியார் உணவகம் திறப்பு விழா நடைபெற்றது. பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் உணவகத்தைத் திறந்து வைத்தார். தோழர்கள் சி.பி.அய்.(எம்), சி.பி.அய், விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்ப்புலிகள், காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சி.ஆர் இராமச்சந்திரன், காரமடை நகர தி.மு.க. செயலாளர் வெங்கடேஷ், காரமடை மேற்கு ஒன்றிய தி.முக. செயலாளர் சுரேந்திரன், கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.எம்.டி. கல்யாண சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அவிநாசி
17.9.2022 அன்று அவிநாசியில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி கொண்டாடினர்.
விழாவுக்கு தலைமை: அ. இராமசாமி, தலைவர், பகுத்தறிவாளர் கழகம், அவிநாசி
வரவேற்பு: அங்கமுத்து, செயலாளர் ப.க அவிநாசி, சிவ. முத்துச்சரவணன் பொருளாளர். ப.க. அவிநாசி ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் மணி, ம.தி.மு.க கோவிந்தராஜ், பொன்னுச்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டு இவ்விழாவினைச் சிறப்பித்தனர்.
புதுக்கோட்டை
அறந்தாங்கி கழக மாவட்டம் புதுக்கோட்டை விடுதியில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 144 ஆம் பிறந்தநாள் அன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பாகக் கொண்டாடப் பட்டது.
புதுக்கோட்டை மண்டலக் கழகத் தலைவர் பெ. இராவணன் மாலை அணிவித்தார். 1954ஆம் ஆண்டு முதல் இன்றுவரையிலும் தொடர்ந்து கழகக் கொடியை ஏற்றி வருகிறார்.
தந்தை பெரியார் வாழ்க, அன்னை மணியம் மையார் வாழ்க, தமிழர் தலைவர் வாழ்க என ஒலிமுழக்கம் செய்யப்பட்டது. ஒன்றிய கழகச் செயலாளர் துரை. குமார், நகரக் கழகச் செயலாளர் த. நெடுஞ்செழியன், மு. முருகன், ந.அ. ஆதி, கருப்பையா மற்றும் இளைஞர்கள் கலந்து கொண் டனர்.
சாத்தூர்
விருதுநகர் கழக மாவட்டத்தில் சாத்தூரில், 17.9.2022 சனி காலை 9 மணியளவில், தி.மு.க. கலை இலக்கியப் பகுத்தறிவுப் பாசறை, பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளரும், நகர் மன்றத் துணைத் தலைவருமான பா.அசோக் தலைமையில் தந்தை பெரியார் அவர்களின் 144 ஆவது பிறந்த நாள் விழா நடைபெற்றது. அய்யா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தோழர் அ.செல்வம் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப் பட்டது.
சிவகாசி
சிவகாசி பெருந்தலைவர் காமராசர் சிலை அருகில், 17.9.2022 சனி காலை 9 மணியளவில், மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் படத்திற்கு மாலை அணிவித்தார். துணை மேயர் விக்னேஷ் வரி காளிராஜன், மாநகர தி.மு.க. பொறுப்பாளர் தோழர் உதயசூரியன், பொதுக்குழு உறுப்பினர் வானவில் வ.மணி மற்றும் தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர். தொடர்ந்து திருத்தங்கல் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர். நகர தலைவர் மா.முரு கன், மாவட்ட கழக இளைஞரணித் தலைவர் ச.சுந்தரமூர்த்தி, திருத்தங்கல் நகர அமைப்பாளர் மா.நல்லவன், இளைஞரணித் தோழர் ஜீவா முனிஸ்வரன் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.
இராசபாளையம்
இராசபாளையம் தந்தை பெரியார் நூற்றாண்டு நினைவுப் படிப்பகத்தில், 17.9.2022 சனி காலை 9 மணியளவில், மாவட்ட கழகத் தலைவர் இல.திருப்பதி சிலைக்கு மாலை அணிவித்தார். நகர தலைவர் பூ.சிவகுமார் கழகக் கொடியேற்றினார். நகர் மன்றத் தலைவர் பவித்ரா ஷியாம், துணைத் தலைவர் கல்பனா குழந்தைவேல், நகர் மன்ற உறுப்பினர் சுமதி ராமமூர்த்தி மற்றும் தி.மு.க. பொறுப்பாளர்கள் தோழர்கள் பங்கேற்று சிலைக்கு மாலை அணிவித்தனர். அனைத்து தோழமை இயக்கப் பொறுப்பாளர்கள் தோழர்கள் சிலைக்கு மாலை அணிவித்தனர். சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்றனர். நிறைவாக நகர செயலாளர் இரா.பாண்டிமுருகன் நன்றி கூறினார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப் பட்டது.
சேலம்
சேலம் அரசு பொறியியல் கல்லூரி முன்பு பழநி புள்ளையண்ணன் தலைமையில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, ஓமலூரில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டா டப்பட்டது. ஓமலூரில் பேரூராட்சி மன்றத்தின் கவுன்சிலர் லோகேஸ்வரி செல்லதுரை அவர்கள் வீட்டு முன்பு தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார் பில் தீவட்டிப்பட்டியில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
No comments:
Post a Comment