மத அடிப்படையில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் வேண்டுமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 6, 2022

மத அடிப்படையில் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் வேண்டுமாம்!

கூறுகிறார் மோகன் பகவத்

நாக்பூர், அக். 6 - நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் சின் விஜயதசமி நிகழ்வில், மோகன் பகவத் கலந்து கொண்டு உரையாற்றியுள் ளார்.

அதில் அவர் கூறியிருப் பதாவது: 

இந்து ராட்டிரம் என்ற கருத்து  அனைத்து மட்டத்தி லும் விவாதிக்கப்பட்டது. இந்த கருத்தை பலர்  ஆதரித் தாலும், இந்து என்ற வார்த் தைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின் றனர். அதற்குப் பதில் மாற்று வார்த்தையை பயன்படுத் தும்படி கூறுகின்றனர். ஆனால், அதில் எந்த மாற் றமும் இல்லை. இந்து என்ற சொல்லை வலியுறுத்திக் கொண்டே இருப்போம். ஆங்கிலம் குறித்து இங்கு பல் வேறு கட்டுக்கதைகளைப் பரப்புகிறார்கள். நாம் நமது வாழ்க்கையிலும், தொழிலி லும் சிறப்பாக இருக்க ஆங் கிலம் முக்கியம் என்பது கட்டுக்கதை. புதிய கல்விக் கொள்கை மாணவர்களைப் பண்பட்டவர்களாகவும், தேச பக்தி கொண்ட நல்ல மனி தர்களாகவும் மாற்ற வழி வகுக்கிறது. சமூகம் இதை ஆதரிக்க வேண்டும். 

இந்தியாவிற்கு மக்கள் தொகை கட்டுப்பாட்டுச் சட் டம் தேவை. மத அடிப் படையிலான ஏற்றத்தாழ்வு களும் கட்டாய மதமாற்றங் களும் அதிகரித்துவிட்டன. இதனால் இதுபோன்ற தேவையான நடவடிக்கை கள் எடுக்கப்படாவிட்டால் நாடு உடைந்து விடும் அச்சம் ஏற்படக்கூடும். இதற்கு கொசோவோ மற்றும் தெற்கு சூடான் உதாரணம்.  மக்கள் தொகை கட்டுப்பாடு மட்டு மின்றி, மத அடிப்படையி லான மக்கள்தொகை சம நிலையும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். இதை நம் மால் புறக்கணிக்க முடியாது. மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு கள் பல்வேறு மாற்றங்களுக்கு அழைத்துச் செல்கிறது. பிறப்பு விகிதத்தில் வேறுபாடு கள் உள்ளன. பேராசை, கட் டாய மத மாற்றம் உள்ளிட் டவையே இதற்குக் காரணம். 

எனவே, அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டு மக்கள் தொகை யைக் கட்டுப்படுத்தும் திட் டம் தேவை.”  

- இவ்வாறு மோகன் பக வத் பேசியுள்ளார்.

No comments:

Post a Comment