கோயில் நிதி முதியோர் இல்லத்திற்குப் பயன்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

கோயில் நிதி முதியோர் இல்லத்திற்குப் பயன்பாடு

சென்னை, அக். 29- உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்கள்மற்றும் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுத்தான் கோயில் நிதியில் முதியோர் இல் லங்கள் துவங்க திட்டமிடப்பட் டுள்ளதாக சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் நிதியில் முதியோர் இல் லங்கள் துவங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதன்படி, சென்னை வில்லிவாக்கம் சிறீதேவி பாலியம்மன் மற்றும் எலங்கி யம்மன் கோயில் நிதியில் இருந்து 16.30 கோடி ரூபாயும், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இருந்து 13.50 கோடி ரூபாயும், பழனி தண் டாயுதபாணி கோயிலில் இருந்து 15.20 கோடி ரூபாய் நிதியை பயன் படுத்தி, சென்னை, திருநெல்வேலி மற்றும் பழனியில் முதியோர் இல்லங்கள் துவங்குவது தொடர் பாக கடந்த ஜனவரி 12ஆம் தேதி அறநிலைய துறை சார்பில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற த்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தமிழ்ச்செல்வி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "சட்டப்படி கோயில் நிதியை அரசு பயன்படுத்த முடியாது. அப்படியே பயன்படுத்துவதாக இருந்தாலும் அறங்காவலர்கள் மூலமாக பொது மக்கள் ஆட்சேபங்களைப் பெற்று முடிவெடுக்க வேண்டும். மூன்று கோயில்களில் பழனி தண்டாயுத பாணி கோயிலுக்கு மட்டும் அறங் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்க உள்ளனர் என தெரியவில்லை” என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர், "பல காரணங்களால் பல கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட வில்லை. அவர்களுக்கு பதிலாக தக்கார்கள் நியமிக்கப்பட்டுள் ளனர். இவர்களின் அதிகாரம் குறித்து தலைமை நீதிபதி அமர்வும், கோயில் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வும் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. உள்ளூர் சட்ட மன்ற உறுப்பினர்கள்மற்றும் மக்க ளின் கோரிக்கைகளை ஏற்று முதி யோர் இல்லங்கள் துவங்கப்பட்டு உள்ளது. கோயில்களின் உபரி நிதிதான் இப்பணிகளுக்கு பயன் படுத்தப்படுகிறது. கோயில் நகை களை உருக்குவதை எதிர்த்தும், கோயில் நிதியில் கல்லூரி துவங் குவதை எதிர்த்தும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அரசும் கோயில்களுக்கு நிதி ஒதுக்குவதாகவும், ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 130 கோடி ரூபாய் சமீபத்தில் ஒதுக் கப்பட்டது" என்று தலைமை வழக் குரைஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, பழனி தண்டா யுதபாணி கோவில் அறங்காவலர் களை எதிர்மனுதாரர்களாக சேர்க் கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசா ரிக்கக் கோரி தலைமை நீதிபதிக்கு மனு அளிக்க இரு தரப்புக்கும் அறி வுறுத்தி, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment