அமெரிக்க பூர்வகுடி பெண்ணின் விண்வெளிப் பயண சாதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 7, 2022

அமெரிக்க பூர்வகுடி பெண்ணின் விண்வெளிப் பயண சாதனை

வாசிங்டன்,அக்.7- விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்க பூர்வகுடி விண்வெளி வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் 45 வயதான நிக்கோல் மான். நாசா சார்பாக அவர் பன்னாட்டு விண் வெளி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

5.10.2022 அன்று அமெரிக்கா வின் புளோரிடாவிலிருந்து புறப் பட்ட விண்கலம் மூலம் பன்னாட்டு விண் வெளி நிலையம் சென்றுள்ள நான்கு விண்வெளி வீரர்களில் நிக்கோல் மானும் ஒருவர். இவர் களை ஏற்றிக் கொண்டு சென்ற ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் விண்கலம் சுமார் 29 மணி நேரத்தில் உரிய சுற் றுவட்டப்பாதையை அடைந்தது.

நிக்கோல் மான் கூறுகையில், இந்த விண்வெளி திட்டம் வருங் கால பூர்வீக அமெரிக்கர்களுக்கு உத்வேகம் அளிக் கும் என நம்பு வதாக தெரிவித்தார்.

"பூர்வகுடி அமெரிக்க குழந்தைகள் தங்கள் கனவுகளை நோக்கி பயணிக்கவும், ஏற்கெனவே உள்ள தடைகள் தகர்த்தெறியப்படும் என் பதை உணர்வதற்கும் இது உத்வேகம் அளிக்கும் என நம்புகி றேன்," என நிக்கோல் மான் தெரிவித்துள்ளார். "எந்த நேரத்திலும் முதன்முறையாகவோ அல்லது கடந்த காலத்தில் யாரும் செய்யாத ஒன்றையோ நம்மால் செய்ய முடிந் தால் அந்தத் தருணம் மிக முக்கிய மானது," எனவும் அவர் தெரிவித் துள்ளார். "அவர்களுக்கு இத் தகைய வாய்ப்புகள் உள்ளன" என அவர் தெரிவித்தார்.

அமெரிக்க கடற்படையின் பல் வேறு விமானங்களை இயக்குவதில் மிகுந்த அனுபவம் கொண்டவரான நிக்கோல் மான், ரவுன்ட் பள்ளத் தாக்கு செவ்விந்திய பூர்வகுடி இனங்களில் ஒன்றான வைலாகி இனத்தின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஆவார். இதுவரை தமது பணிக்காக ஆறு பதக்கங்களை பெற்றுள்ள அவர், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணி யாற்றியுள்ளார்.


No comments:

Post a Comment