பெங்களூரு, அக். 25- கவுரி லங்கேஷ் கொலையில் கைதானவரின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசித்து வந்த ஊடகவி யலாளரும், பகுத்தறிவுவாதியுமான கவுரி லங்கேஷ் கடந்த 2017-ஆம் ஆண்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மராட்டியத்தை சேர்ந்த கிரிகேஷ் தேவ்திகர் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். இவர் ஹிந்து ஜாகிருதா சமிதி மற்றும் கோவாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சனாதன் சன்ஸ்தா என்ற அமைப்பிற்கு நெருக்கமானவர்.
சனாதன் சன்ஸ்தா ஹிந்து கலாச்சாரத்தைப் பாதுகாப்பும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மறைமுக பிரிவு ஆகும்.
இந்த நிலையில் பிணை கேட்டு கிரிகேஷ் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு பிணை மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து கருநாடக உயர்நீதிமன்றத்தில் கிரிகேஷ் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கைது செய்யப்பட்ட 90 நாட் களுக்குள் தன் மீது காவல்துறையினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. இதனால் தனக்கு பிணை வழங்க வேண்டும் என்று கூறி இருந்தார். அந்த மனு மீது நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் விசாரணை நடத்தினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை மனுதாரர் கைது செய்யப் படுவதற்கு முன்பே தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என்று கூறி கிரிகேசின் மனுவை தள்ளுபடி செய்தார்.
No comments:
Post a Comment