ராணுவ பாதுகாப்புடன் புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணியாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 3, 2022

ராணுவ பாதுகாப்புடன் புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ். பேரணியாம்

புதுச்சேரி,அக்.3- புதுச்சேரியில் நேற்று (2.10.2022)  பேரணியை நடத்த ஆர்எஸ்எஸ் அனுமதி கேட்டிருந்தது. இதற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி அளித்தது. அதன்படி, ஆர்எஸ்எஸ் பேரணி புதுச்சேரி பாலாஜி திரையரங்கத்திற்கு அருகில் மாலை 4 மணிக்கு தொடங்கியது.

உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர் சாய் சரவணன் குமார், மாநிலங்களவை உறுப்பினர் செல்வ கணபதி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்ட் ஜான்குமார், பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் உள்ளிட்ட ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.

பேரணி காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி, புஸ்ஸி வீதி, மறைமலை அடிகள் சாலை வழியாக கடலூர் சாலையை அடைந்து அங்குள்ள சிங்காரவேலர் சிலை அருகே மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. முக்கிய சந்திப்புகளில் பாஜக மகளிரணியினர் மலர் தூவி வரவேற்றனர். பேரணி 5 மணி அளவில் சுதேசி மில் பொதுக்கூட்டத்தை அடைந்தது.

ஆர்எஸ்எஸ் நடத்திய இந்த பேரணியில் நகரின் முக்கிய சந்திப்புகளில் துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். சுதேசி மில் வளாகத்தில் பொதுக்கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதையடுத்து பொதுக் கூட்டமும் நடந்தது.

காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை (அக்.2) மாலை நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணி, பொதுக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் சீருடையுடன் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment