அருப்புக்கோட்டை, அக். 30- அருப்புக்கோட்டையில் இயற்கை பெ.இரவிச்சந்தி ரன் - சாந்தி இணையரின் மகனும், திராவிடர் மாண வர் கழகத் தோழருமான இர.இளம்பரிதி, மேலூர், தெற்குத் தெரு ஆ.மோகன் ராம் - ராசம்மாள் இணை யரின் மகள் மோ.புவ னேஸ்வரி இவர்களது வாழ்விணையர் ஏற்பு விழா, 28.10.2022 வெள்ளி காலை 10 மணிக்கு, குவின்ஸ் நாச்சியார் மகாலில் நடைபெற்றது.
தேனி மாவட்ட கூடு தல் நீதிபதி ஏ.ஆர்.வி.ரவி அவர்கள் தலைமையில், நாகை மாவட்ட தமிழ் நாடு அறிவியல் இயக்கத் தலைவர் எஸ்.எம்.ஆரிப் அவர்கள் மணவிழா வினை நடத்தி வைத்தார். பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ந.ஆனந்தம், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே. எம்.விஜய குமார் மற்றும் தோழர்கள் வாழ்த்துரை வழங்கினர். விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அவர்க ளும், கழகப் பொறுப்பா ளர்களும் மணவிழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
மாவட்ட கழக செய லாளர் தி.ஆதவன், மாநில ப.க. துணைத் தலைவர் கா.நல்லதம்பி, மாவட்ட ப.க. அமைப்பாளரும், சாத்தூர் நகர் மன்றத் துணைத் தலைவருமான பா.அசோக், மண்டல கழக இளைஞரணிச் செயலாளர் இரா.அழகர், நகர கழக செயலாளர் பா.இராசேந்திரன், தலை வர் சு.செல்வராசு, க.எழி லன் மற்றும் தோழர்கள், உற்றார் உறவினர் நண் பர்கள் பெருமளவில் பங் கேற்று சிறப்பித்தனர். திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்த்துச் செய்தி வாசித்தளிக்கப் பட்டது.
மணவிழா மகிழ்வாக நாகம்மையார் குழந்தை கள் இல்ல நிதி ரூ.1000, அருப்புக்கோட்டை தந்தை பெரியார் படிப்பக நிதி ரூ.1000 நன்கொடை வழங்கினர்.
No comments:
Post a Comment