எர்னாகுளம், அக். 30-- கேரளாவில் மீண்டும் பரவும் பறவைக் காய்ச்சல்- ஷிகெல்லா வைரஸ் அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு 20ஆயிரம் கோழிகள் மற்றும் வாத்துகளை அழிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கேரள மாநிலம் கோழிகோட்டில் மேலும் இரு வருக்கு ஷிகெல்லா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இந்த ஷிகெல்லா வைரஸ் அசுத்தமான நீர் மற் றும் உணவால் பரவும் தன்மை கொண்டது. கேரளாவின் காரச்சேரி பகுதியை சேர்ந்த ஒன்பது வயது சிறுவனுக்கு அண்மையில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனைய டுத்து சிறுவனு டன் தொடர்பில் இருந்த பல ருக்கும் சோதனை செய்யப்பட் டது. இதில் மேலும் இரண்டு பேருக்கு தொற்று உறுதிசெய் யப்பட்டது. தொற்று பரவி வரு வதால், அங்கு நோய்த்தடுப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் உள்ள சில பண்ணைகளில் வளர்க்கப் பட்ட வாத்துகளுக்கு ஏவியன் புளூ எனப்படும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த வாரம் 1,500 வாத்துகள் திடீ ரென இறந்துள்ளன. உடனடி யாக அந்த பண்ணைகளில் சுகாதார துறையினர் மற்றும் கால்நடை துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் நோய் பாதிப்புக்கு ஆளான பறவைகளின் மாதிரி கள் சேகரிக்கப்பட்டு போபா லில் உள்ள தேசிய ஆய்வு மய் யத்திற்கு அனுப்பி வைக்கப்பட் டது. அங்கு நடந்த பரிசோத னையில் வாத்துக்களுக்கு பற வைக் காய்ச்சல் இருப்பது உறுதியானது. இதையடுத்து, ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண தேஜா தலைமையில் சுகாதார துறை அதிகாரிகளின் அவசரக் கூட்டம் நடைபெற் றது. இதில், அந்த பகுதியின் சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற் றளவு அளவில் வீடுகள் மற்றும் பண்ணைகளில் வளர்க்கப் படும், வாத்துகளை உடனடி யாக கொல்ல உத்தரவு பிறப்பிக் கப்பட்டது. அதன்படி சுமார் 20,471 வாத்துகள், கோழிகள் கொல்லப்பட உள்ளன. இதற் கான நடவடிக்கைகளை ஆலப் புழா மாவட்ட நிர்வாகமும், ஹரிபாடு பேரூராட்சியும் மேற் கொண்டுள்ளன.
கேரளாவில் பறவைக் காய்ச் சல் பாதிப்பு பற்றி ஆய்வு செய்ய ஒன்றிய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் சார் பில் 7 பேர் கொண்ட உயர் மட்ட குழு ஒன்றை அந்த மாநி லத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கேரளாவில் பொது சுகாதார நடைமுறைகள், மேலாண் வழி காட்டு நெறிமுறைகள் மற்றும் பறவைக் காய்ச்சல் பரவலை எதிர்கொள்வதற்கான ஒழுங்கு முறைகள் உள்ளிட்ட விசயங் களில் மாநில சுகாதார துறைக்கு உதவியாக இந்த குழு செயல்படும்.
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவைக்காய்ச்சல் தாக்கம் உறுதி செய்யப்பட்டதால், நாமக் கல் மற்றும் சுற்று வட்டாரங் களில் உள்ள கோழிப் பண் ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோழிப் பண்ணையாளர்கள் தீவிரப் படுத்தி உள்ளனர்.
No comments:
Post a Comment