மருத்துவர் சந்திரசேகருக்கு 'பன்னாட்டு தலைமைப் பண்பாளர்' விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

மருத்துவர் சந்திரசேகருக்கு 'பன்னாட்டு தலைமைப் பண்பாளர்' விருது

சென்னை, அக்.29 சென்னையைச் சேர்ந்த  குடல்நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரசேகருக்கு, அமெரிக்க நிறுவனத்தின் சார்பில், பன்னாட்டு சேவையாளர் விருது வழங்கப்பட்டது.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள 'மெட் இந்தியா' மருத்துவமனை நிறுவ னரும், பிரபல இரைப்பை குடல்நோய் நிபுணருமான மருத்துவர் சந்திரசேகர், 'பத்மசிறீ' விருது பெற்றவர். இவர், மாநில மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் உறுப்பின ராகவும்,  சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தில் கவுரவப் பேராசிரியராக 2021 ஆம் ஆண்டிலிருந்து அவர் பணி யாற்றி வருகிறார். 

மேலும் இந்திய இரைப்பை குடல் நோய்க்கான அமைப் பின் தலைவராக 2016-2017ஆம் ஆண்டில் பதவி வகித்தார். தன்னுடைய பணியில் நூற்றுக்கணக்கான குடல் நோய் மருத்துவர்களை உருவாக்கி அவர்கள் உலகெங்கும் பணியாற்றி வருகின்றனர்.  நவீன தொழில் நுட்பத்தின் மூலம் குடல் மற்றும் இரைப்பை தொடர்பான பல சிக்கலான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். குடல் மற்றும் இரைப்பை நோய் தொடர்பான நுட்பமான அறுவை சிகிச்சைகளை பதிவு செய்து பல மருத்துவக் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் பயிற்சிக்காக வழங்கி உள்ளார்.   2019ஆம் ஆண்டு, உலக இரைப்பை குடல் அமைப்பின் சிறந்த விருது மற்றும் அமெரிக்க இரைப்பை குடல் சிகிச்சை கல்லூரியின், சமூக சேவைக்கான விருது களையும் வென்றுள்ளார்.மேலும், இந்திய மருத்துவ சங்கத்தின், 'கர்க்' வாழ்நாள் சாதனையாளர் விருது, 'ஜீவ்ராஜ் மேத்தா' தேசிய தங்கப் பதக்க விருது களையும் பெற்றுள்ளார்.

இவருக்கு, அமெரிக் காவின் சாண்டியாகோவில் உள்ள, அந்நாட்டின் இரைப்பை குடல் எண் டோஸ்கோப் அமைப்பு, 2022ஆம் ஆண்டிற்கான, 'கிரிஸ்டல் விருது' எனப் படும், மதிப்புமிக்க 'பன் னாட்டு சேவை விருது' வழங்கி கவுரவித்திருந்தது.   80 ஆண்டுகள் பழைமை யான இந்த அமெரிக்கன் இரைப்பை குடல் எண்டோ ஸ்கோப் அமைப்பு, 15 ஆயிரம் உறுப்பினர்களை கொண்டதாகும் அதே போல் தற்போது அமெரிக்கன் குடல் நோய் மற்றும் இரைப்பை தொடர்பான அக்கல்லூரி இவருக்கு 'பன்னாட்டுத் தலைமைப் பண் பாளர்' விருது வழங்கி சிறப்பித்துள்ளது.  தமிழ் நாட்டில் இந்த விருதைப் பெறும் முதல் நபர் மற்றும் இந்திய அளவில் இரண்டாவது நபர் இவர் ஆவார்.

No comments:

Post a Comment