புதுடில்லி,அக்.29- கடந்த 25.10.2022 அன்று மாலை சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்த நேரத் தில் காலம்காலமாக கடவுள், மதம், பக்தியின் பெயரால் திணிக்கப்பட்ட மூடநம்பிக்கைகளின் காரணமாக கிரகண நேரத்தில் அறியாமையில் உழலும் மக்கள் அச்சத்துடன் வீட்டைவிட்டு வெளியே வராமலும், உணவு ஏதும் உட்கொள் ளாமலும் இருக்கின்றனர். இவை எல்லாம் மூடப்பழக்கங்கள் என விழிப்புணர்வு ஊட்டும் வகையில் ஒடிசாவில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. ஒடிசா மாநில தலைநகரான புவ னேஸ்வரில் பகுத்தறிவுவாதிகளைக் கொண்ட குழுவின் சார்பில் கிரகண நேரத்தில் பிரியாணி சாப்பிடும் சமூகத் திருவிழா நடத்தப்பட்டது. இதில் விழாவுக்கு வந்தவர்களுக்கு கோழி பிரி யாணி பரிமாறப்பட்டது.
இதுகுறித்து பிரியாணித் திருவிழா நடத்திய வர்களில் ஒருவரும் உத்கல் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற தத்துவவியல் பேராசிரியருமான பிரதாப் ரத் கூறும்போது,
“இந்திய அரசமைப்பு சட்டப்படி நான் நடத்திய பிரியாணித் திருவிழா தவறானது அல்ல. நான் தத்துவவியலின் அடிப்படையில் வாழ்ந்து வருகிறேன். அறிவியலுக்கு எதிரான வற்றை கடைப்பிடிக்கக் கூடாது. எனது சிறுவயது முதல் நான் கிரகண நேரத்தில் அசைவ உணவு உண்டு வருகிறேன். எதிர்காலத்திலும் இதை பின்பற்றுவேன்” என்றார்.
கொலை அச்சுறுத்தல்-காவல்துறையில் புகார்
இந்நிலையில் பிரியாணித் திருவிழா நடத்திய திபேந்தரா சுதர் என்பவருக்கு தொலைப்பேசியில் கொலை மிரட்டல் வந்துள்ளது. இது தொடர்பாக அவர் தனது குடியிருப்பு அமைந்துள்ள கட்டக் நகரின் மர்கட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கிரகணம் சபித்திருக்குமாம் - கூறுகிறார் பூரி சங்கராச்சாரி
இதற்கு ஒடிசாவில் இந்து அமைப்புகளும், மடத் துறவிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதுகுறித்து பூரி சங்கராச்சாரியாரான சுவாமி நிஷ்சாலணந்த் சரஸ்வதி கூறும்போது, “கிர கணத்தில் பிரியாணித் திருவிழா நடத்துவது சனாதன தர்மத்தின் அடிப்படை கொள்கைகளை அவமதிப்பது ஆகும், விழாவை நடத்தியவர்கள் இதை அறிந்திருக்கவில்லை. இந்தியர்களின் வாழ்க்கையின் விதிமுறைகளும் கலாச்சாரங் களும் தத்துவம், அறிவியல் மற்றும் சமூக நடப்புகளை மய்யமாக வைத்து உருவாகிறது. எனவே, இவர்களது உணவை அருந்தியவர் களை கிரகணம் சபித்திருக்கும்” என்றார்.
பிரியாணித் திருவிழா தொடர்பாக காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதில் இந்து மகா சபை, ஒடிசா ‘பிராமணர் சபை' மற்றும் இந்து மடாதிபதி, இந்து துறவி ஒருவரின் புகார்களின் பேரில் 4 வழக்குகள் பதிவாகி உள் ளன. இவற்றின் மீது விசாரணையும் தொடங்கி யுள்ளது.
No comments:
Post a Comment