குஜராத்தில் பொது சிவில் சட்டமாம் காங்கிரஸ் கடும் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 30, 2022

குஜராத்தில் பொது சிவில் சட்டமாம் காங்கிரஸ் கடும் கண்டனம்

அகமதாபாத், அக்.30- நாடு முழுவதும் உள்ள அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களுக்கும் ஒரே மாதிரியான உரிமைகளை அளிக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு திட்ட மிட்டு உள்ளது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல் படுத்த மாநில பாஜக அரசு முடிவு செய்துள் ளது. இது தொடர்பாக ஆமதாபாத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய மாநில உள்துறை அமைச் சர் ஹர்ஷ் சங்வி, உத்தர காண்ட் மாநிலத்தில் ஒரே மாதிரியான குடி மைச் சட்டத்தை அமல் படுத்துவது குறித்து மதிப் பீடு செய்ய, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் கீழ், ஒரு குழு அமைக் கப்பட்டுள்ளது என்றார்.

அதேபோல் ஒரு குழுவை அமைக்கும் திட்டத்திற்கு குஜராத் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த குழுவுக்கு அம்மாநில உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை வகிப்பார் என்றும், இதில் 3 முதல் 4 உறுப்பினர்கள் வரை இடம் பெறுவார் கள் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. 

இந்நிலை யில் குஜராத் அரசின் இந்த அறிவிப் புக்கு அம்மாநில காங்கி ரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாஜக அர சின் இந்த முடிவு சட்ட மன்ற தேர்தலுக்கு முன் பான ஒரு ஏமாற்று வேலை என்று குஜராத் காங்கிரஸ் மூத்த தலைவர் அர்ஜுன் மோத்வாடியா குறிப்பிட்டார். இது போன்ற சட்டங்களை இயற்றும் அதிகாரம் மாநில சட்டமன்றத்திற்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment