உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல்துறை வேலைக்கு பல லட்சம் பேர் காத்திருப்பு வருண் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 30, 2022

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல்துறை வேலைக்கு பல லட்சம் பேர் காத்திருப்பு வருண் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு

புதுடில்லி, அக். 30- உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல்துறை வேலைக்கு பல லட்சம் பேர் காத்திருப்ப தாக - மக்களவை உறுப்பினர் வருண் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.  உத்தரப்பிரதேச மாநிலம், பிலிப்பிட் தொகுதி பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி, அந்த மாநிலத்தில் காவல்துறை வேலைக்கு இளைஞர்கள் 4 ஆண்டுகளாக காத்திருந்தும் பல னில்லை என சாடி இருக்கிறார். 

இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "காவல்துறை வேலைக்கு ஆள் எடுக்கப்படவில்லை. நம்பிக்கையும் வழங்கப்படவில்லை. இளைஞர்கள் தங்கள் குரலை சமூக ஊடகங்கள் வழியாக உயர்த்து கின்றனர். ஆனால் நிவாரணம்தான் கிடைப்பதாக இல்லை. ஆனால் அவர்கள் வீதிகளில் இறங்கி போராடினால் அவர்கள் தொந்தரவு செய்பவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இது அநீதி இல்லையா?" என கூறி உள்ளார். பா.ஜ.க. மக்களவை உறுப்பினர் வருண்காந்தி, என்ற போதும், அந்தக் கட்சியின் ஒன்றிய, உ.பி. மாநில அரசுகளை பல்வேறு விஷயங் களில் சாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

No comments:

Post a Comment