சமசுகிருதம் - ஒரு செயற்கைக் கலவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 1, 2022

சமசுகிருதம் - ஒரு செயற்கைக் கலவை

ஆரியர்களின் மொழியாகிய சமசுகிருதம் கங்கை நாட்டில் கி.மு. 3ஆம் நூற்றாண்டில் உருவாகி     கி.பி.5 ஆம் நூற்றாண்டில் இலக்கிய வடிவம் பெற்ற ஒரு செயற்கைக் கலவை மொழி.

சமசுகிருதம் என்னும் சொல் திருந்திய வழக்கு என்னும் பொருளுடையது; இதன் எதிர்வழக்கு பிராகிருதம், அதாவது திருந்தா மொழி, சமசுகிருதத்தில் புத்தர், அசோகன் கால இலக்கியம் இல்லை.

அசோகன் காலத்தில் பிராகிருத வகைகளே இருந்தன. அவனும் அவனுக்கு முன்பு புத்தரும் பேசிய பாளியும் மகாவீரர் பேசிய அர்த்தமாகதியும் அவற்றுட்பட்டவையே. சமசுகிருத இலக்கியம் தமிழ்ச் சங்க கால இலக்கியத்துக்கும் திருக்குறளுக்கும் மிகவும் பிற்பட்டது.

சமசுகிருதமும் பாணினிக்கும் முற்பட்ட காலத்துப் புராண இதிகாச மொழியும் அதற்கும் முற்பட்ட வேதமொழியும் தொடர்புடையவையானாலும் வெவ்வேறு. இம் மூன்றையும் சமசுகிருதம் என்னும் ஒரே பெயரால் வழங்குவதன் மூலம் அது தமிழையொத்த பழைமையும் இலக்கியப் பண்பும் மக்கட் சமயச் சார்புடைமையும் பெற்றது.

என 2000 ஆண்டுகளாக ஆரியர்களால் உலகை நம்ப வைக்க முடிகிறது..

சமசுகிருதம் இலக்கிய மொழியானபோதே வழக்கிழந்த மொழியாயிற்று; அதற்குமுன் அது பேச்சு மொழியாய் இருந்தது. அப்பேச்சுமொழிச் சமசுகிருதம் உருவான காலத்தில் ஆரியர்கள் நாடோடிகள். இவ்வாழ்வின் சின்னத்தைச் சமசுகிருதம் இன்னுந் தாங்கிக் கிடக்கிறது.

அதில் இன்னும் நாட்டுப் பெயர்கள் உயர்திணைப் பன்மைப் பெயர்களே. அதாவது, பாண்டிய நாடு என்பது சமசுகிருதத்தில் பாண்டியர்கள் எனப்படுகிறது. ‘இராமன் கோசலத்திலிருந்து விதேகத்துக்குச் சென்றான்’ என்பதன் சமசுகிருதப் பாணி ‘இராமன் கோசலத்தாரிடமிருந்து விதேகத்தாரிடம் சென்றான்’ என்பதே. அன்று அவர்களது நாடு, வீடுந்தெருவும் ஊரும் உடைய நாடல்ல, நாடோடிக் கும்பல்களாகத் திரண்டு இடத்துக்கிடஞ் சென்ற ஒரு மந்தையாகவே இருந்தது என்பதை இது காட்டுகிறது.

(ஆதாரம்: பன்மொழிப் புலவர் அறிஞர் கா. அப்பாத்துரை எழுதிய 

‘சரித்திரம் பேசுகிறது’ என்னும் நூல். பக். 138 - 144)


No comments:

Post a Comment