புதுடில்லி,அக்.1- நீட் தேர் வின் தாக்கம் குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக் கைக்கு தடை கோரி தொடுக்கப் பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள் ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டது. முதற்கட்டமாக நீட் தேர் வால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு 85 ஆயிரத் திற்கும் மேற்பட்டோரிடம் கருத்து கேட்டு கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதலமைச்சரிடம் 165 பக்க அறிக்கையாக சமர்ப்பித்தது.
அதில் பெரும்பாலானோர் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ராஜன் குழுவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக் கப் பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் குழு அமைத் தது சரியே என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
No comments:
Post a Comment