புதுச்சேரி, அக். 25- புதுவை பல் கலைக்கழகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் 5 நிறுவனங் களான, அசாம் திப்ரூகார் -பிராந் திய மருத்துவ ஆராய்ச்சி மய்யம், உத்திரபிரதேசம் கோரக்பூர் -பிராந் திய மருத்துவ ஆராய்ச்சி மய்யம், மத்திய பிரதேசம் ஜபல்பூர் -தேசிய பழங்குடியினர் ஆரோக்கிய ஆராய்ச்சி நிறுவனம், பீகார் பாட்னா -ராஜேந்திரா நினைவு மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், புதுவை வெக்டார் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மய்யம் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்து ணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டது.
நிகழ்ச்சியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி இயக்குநர்கள் அஷ்வனி குமார், கன்வர் நரேன், ரஜினிகாந்த் சிறீவஸ்தவா, அபரூப் தாஸ், டாக் டர் கிருஷ்ணா பாண்டே, பன் னாட்டு சுகாதாரம் மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறைத் தலை வர் முகேஷ் குமார், டில்லி இந்திய மருத்துவ ஆராய்ச்சி துணை இயக்குநர் ஜெனரல் லட்சுமிநாரா யணன் பங்கேற்றனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந் தத்தின் கீழ், 5 இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களிலும் ஒரு புதிய முதுகலை படிப்பு வழங்கப் படுகிறது. இத்திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதாந்திர உத வித் தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். மேலும் முனைவர் பட்டத்திற்கான இரட்டை வழிகாட்டி முறை, மாநாடுகள், பட்டறைகள் நடத்துதல், ஆசிரி யர்கள் மற்றும் மாணவர்களை பரிமாறிக் கொள்ளுதல் உள்ளிட்ட செயல் திட்டங்கள் அமல்படுத்தப் பட உள்ளது.
No comments:
Post a Comment