நீரிழிவு நோய் சிகிச்சைக்காக செயற்கை நுண்ணறிவு திறன் செயல்தளம் அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 7, 2022

நீரிழிவு நோய் சிகிச்சைக்காக செயற்கை நுண்ணறிவு திறன் செயல்தளம் அறிமுகம்

சென்னை, அக்.7 நீரிழிவு சிகிச்சை தயாரிப்புகள் மற்றும் தகவலை மக்கள் அணுகிப் பெற உதவ  'DIA'A1  (செயற்கை நுண்ணறிவு) திறன் கொண்ட சேட்பாட் என்ற செயல்தளத்தை, நீரிழிவு சிகிச்சை மய்யங்களில் மிகப் பெரிய நிறுவனமான டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மய்யம், 3D  முனைப்பு திட்டத்துடன் கூடிய டாக்டர் மோகன்ஸ் டிஜிட்டல் நீரிழிவு புரட்சி என்ற பெயரில்  டிஜிட்டல் புத்தாக்க திட்டத்தை சென்னை கோபாலபுரத்தில் உள்ள இம்மருத்துவமனையில் தொடங்கியிருக்கிறது.

அதன் டிஜிட்டல் உருமாற்ற நடவடிக்கையின்கீழ் செயற்கை நுண்ணறிவால் செயல்படுத்தப்படும் திட்டமாக இது இருக்கிறது. இந்த மூன்று டிஜிட்டல் செயல்பாடுகள் வருமாறு:

1. 'DIA' தானியியக்க செயல்பாடாக டிஜிட்டல் உரையாடல்களின் வழியாக மக்களுக்கு உதவ கி1 உதவியுடன் இயங்கும்.

2. 'DIALA'  நோயாளிகளுக்கு நட்புறவான எளிமையான மொபைல் செயலி.

3. 'DIANA'  துல்லியமான நீரிழிவு சிகிச்சைக்கான உடல் நல பராமரிப்பு செயலி ஆகிய இம்மூன்று மருத்துவ செயல்தளத்தை 5.10.2022 அன்று சென்னை மாநகரில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மய்யத்தின் தலைவர் டாக்டர் வி.மோகன் மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஆர்.எம். அஞ்சனா ஆகியோர் இச்செயல் தள திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

No comments:

Post a Comment