இலவச நலத் திட்டங்கள் குறித்து மோடி முரண்படுவது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

இலவச நலத் திட்டங்கள் குறித்து மோடி முரண்படுவது ஏன்?

புதுடில்லி, அக். 25- "சொல்வது ஒன்று  செய்வது வேறொன்று" என்பதில்  மோடி கடந்த எட்டு ஆண்டுகளில் கருப்பு பணம் மீட்பு,வங்கிகணக்கில் 15லட்சம் செலுத்துவது என பல முறை அந்தர்பல்டி அடித்து சாதனை படைத்திருக்கிறார் இப்ப குஜராத் தேர்தலுக்காக உலக மகா சாதனை படைத்த மாதிரி பத்து லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதாக அறிவித்து அதை விளம்பரப்படுத்துவதில் தீவிரமாக இருக்கிறார் மோடி என்கின்றனர் டில்லி தலைவர்கள் .

அதாவது, 2014 தேர்தலின் போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு  2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்று கூறப்பட்டிருந்தது. மோடி ஆட் சிக்கு வந்து எட்டு ஆண்டு கள் முடி வடைந்திருக்கிறது. அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியிருந் தால் 16 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், பல லட்சம் பேருக்கு இருந்த வேலையும் பறிபோனதுதான் மக் கள் கண்ட பலன். 

தன்னுடைய ஆட்சிக் காலத்தில் புதிய வேலை வாய்ப்புகளை உரு வாக்காத மோடி அரசு 2024 தேர் தலை மனதில் வைத்துக் கொண்டு மீண்டும் தனது தில்லுமுல்லு ‘வேலையை’ காட்டத் துவங்கி யுள் ளது. இவரது ஆட்சியில் வேலையின்மை விகிதம் 7.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக சிஎம்அய்இ தகவல் தெரிவித்துள்ளது. 

கரோனா காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சக் கட்டத்திற்கு சென்றது. சிறு, குறு மற்றும் குடிசைத் தொழில்கள் மூடுவிழா கண்டதால் பல கோடி பேர் வேலையிழந்து வீதிக்கு வந்த னர். கரோனா நெருக்கடியை பயன் படுத்திக் கொண்டு பெரு முதலாளி களுக்கு வரிச் சலுகை, கடன் தள்ளு படி என வாரி வழங்கிய மோடி அரசு வேலையில்லாத் திண்டாட் டத்தை போக்க துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. வீட்டுக் குள் அமர்ந்து கொண்டு நாய்களுக் கும் வாத்துகளுக்கும் உணவுவழங்கி போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டாடிக் கொண் டிருந்தார்.

ஆனால், இப்போது 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புத் திட் டத்தை துவக்கியுள்ள தாகவும், 2023 இறுதிக்குள் இந்த பணியிடங்க ளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் பிரதமர் மோடி கூறி யுள்ளார். இது அடுத்தாண்டு தீபா வளிக்கு பரிசாக அமையும் என்று பாஜகவினர் தம்பட்டம் அடிக் கின்றனர். பல கோடி பேர் வேலையில்லாமல் தவிக்கும் போது இவர் கள் கூறுவது போல பத்து லட்சம் பேருக்கு வேலை அளித்தாலும் அது யானைப் பசிக்கு சோளப் பொரியாகவே அமையும். அதே போன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத் திற்கான நிதியை ஒவ்வொரு பட் ஜெட்டிலும் குறைத்துக் கொண்டே வருகிறது மோடி அரசு. காந்தியை கொன்ற கோட்சேவை கொண் டாடும் மோடிக்கு காந்தி பெயரில் மக்கள் திட்டம் இருந்தால் எப்படி பொறுக்கும்?

இதனால் இந்தத் திட்டத்தையே நிறுத்திவிட சதி நடக்கிறது. என் கின்றனர். ஆனால், இந்தத் திட்டத் தின் கீழ் 7 கோடி பேர் பலனடைந்து வருவதாக மோடி கூறுகிறார். ஊரக வேலை வாய்ப்புத் திட் டத்தை நகர்ப்புறத்திற்கும் விரிவு படுத்தவேண்டும். வேலை நாட் களையும், கூலியையும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மோடி அரசினால் ஏற்கப்பட வில்லை.

மறுபுறத்தில் இலவசங்களால் வரி செலுத்து வோர் வேதனைப் படுவதாக பிரதமர் மோடி கூறி யுள்ளார். பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு வழங்குகிற விழா என்று கூறிவிட்டு, இலவசங்களே கூடாது என்பது முரண்பாடு இல்லையா? மாநில அரசுகள் வழங்கும் நலத் திட்ட உதவிகள், இலவசக் கல்வி, இலவச மருத்துவம், இலவச மின் சாரம் போன்றவைதான் இவரது கண்ணை உறுத்துகின்றன. மாநில அரசுகள் ஏழைகளுக்கு வழங்கு வது மட்டும்தான் இலவசம் போலும். கார்பரேட் முதலாளி களுக்கு மோடி தள்ளுபடி அளிப் பது அதில் சேராது போலும்.

என்ன செய்யப் போகிறார்கள் மக்கள்?

No comments:

Post a Comment