இந்தியாவின் கருத்துகளைத் தீர்மானிக்கும் முன்னணி ஊடகங்கள் பெரும்பாலும் இந்த மூன்று சமூகத்தினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. குறிப்பாக, பனியாக்களின் ஆதிக்கம் அதிகம். உதாரணத்துக்கு, நாட்டிலேயே அதிக மான பார்வையாளர்களைச் சென்றடையும் ‘ஜீ தொலைக் காட்சி குழுமம்’ பனியாக்களால் நடத்தப்படுகிறது. இந்தியில் அதிகம் விற்கும் பத்திரிகைகளான ‘தைனிக் ஜாக்ரன் ’, ‘தைனிக் பாஸ்கர்’ இரண்டுமே பனியாக்களால் நடத்தப்ப டுபவை. இந்தியாவின் முன்னணி ஆங்கிலப் பத்திரிகை களான ‘தி டை ம்ஸ் ஆஃப் இந்தியா ’ (ஜெயின்கள்), ‘ஹிந் துஸ்தான் டைம்ஸ்’ (பனியாக்கள்), ‘தி இந்து’ (பிராமணர்கள்) , ‘ தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (பனியாக்கள்) நான்கும் இச்சமூகத்தினராலேயே நடத்தப்படுகின்றன.
இப்படி இந்தச் சமூகத்தினரால் நடத்தப்படும் ஊடகங் களிலும் சரி; இவர்கள் அல்லாத சமூகத்தினரால் நடத்தப் படும் ஊடகங்களிலும் சரி; முடிவெடுக்கும் பதவிகளில் இந்தச் சமூகங்கள் உள்ளிட்ட இருபிறப்பாளர்கள் என்று குறிப்பிடப்படும் முற்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தோரின் ஆதிக்கம் அதிகம். அம்பேத்கர் சுட்டும், முற்பட்டோரைப் பார்த்தொழுகும் நோயே காரணம். சந்தையில் வலுவான ஊடகங்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர்கள், பழங்குடியினர் பிரதிநிதித்துவம் மிகக் குறைவு. அதிலும் சமூகத்தின் கருத்துகளை உருவாக்குவதில் பெரும்பங்காற் றும் பத்திரிகையாளர்கள், கட்டுரையாளர்கள், விவாதர்கள் இடத்தில் இவர்களுடைய இடம் மிக அரிது. அப்படியே இடம் பிடித்தாலும் அவர்கள் தங்களுடைய அரசியலைப் பேசுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதைத்தான் இந்த ஆய்வும் சொல்கிறது.
இந்தியாவில் ஒருகாலத்தில் பல துறைகளிலும் இப்படி யான ஜாதி ஆதிக்க நிலை இருந்தது. இன்று பல இடங்களில் சூழல் மாறுகிறது. ஊடகங்களிலும் அந்த மாற்றம் பிரதிபலிக் கிறது என்றாலும், மிகக் குறைவாகவே அந்தப் பிரதிபலிப்பு இருக்கிறது.
இந்திய ஊடகங்களின் தலைமைப் பதவிகளில் 88% முற்பட்ட ஜாதியினரே இருக்கின்றனர். அச்சு, தொலைக் காட்சி ஊடகங்களில் மட்டும் அல்லாது புது யுக ஊடகங்கள் என்று வர்ணிக்கப்படும் இணைய ஊடகங் களிலும் இதுதான் நிலைமையாக இருக்கிறது.
2021-2022 காலட்டத்தில் செல்வாக்குச் செலுத்தும் ஊடகங்களில் உள்ள 218 உயர் பதவியாளர்களின் தகவல்களிலிருந்து இந்த ஆய்வு முடிவு பெறப்பட்டிருக்கிறது. எந்த பிரதான ஊடகத்திலும் தாழ்த்தப்பட்டவர்கள் - பழங் குடிகள் தலைமைப் பதவியில் இல்லை.
நாட்டின் கருத்தை வடிவமைப்பதில் முக் கியப் பங்காற்றும் கட்டுரையாளர்கள்/கருத் தாளர்கள் சமூகப் பின்னணியிலும் இதுபோன்ற நிலையே நீடிக்கிறது. ஊடகங்களில்‘செய்திக் கட்டுரைகளைத் தருவது யார் என்பதும் முக்கியம் - இந்திய ஊடகங்களில் விளிம்புநிலை ஜாதிகளின் பிரதிநிதித்துவம்’என்ற தலைப்பில் இந்த ஓராண்டு காலத்தில் வெளியான கட்டுரைகள், காணொலிகள் ஆய்வுக்குள்ளாக் கப்பட்டன.
இதிலும் முற்பட்ட ஜாதியினரின் ஆதிக்கமே அதிகம். பிற்படுத்தப்பட்டோர் 10%; தாழ்த்தப்பட்டோர்கள் - பழங்குடிகள் சற்றேறத்தாழ 5% எனும் அளவுக்கே ஏனையோருக்கான பிரதிநிதித்துவம் இருந்திருக்கிறது. பழங்குடிகளுக்கான பிரதிநிதித்துவமும் சரி, அவர்களுடைய விவகாரங்களும் சரி; மிக மிகக் குறைவான அளவிலேயே ஊடகங்களில் இடம் பிடிக்கின்றன. முன்னணி ஆங்கிலத் தொலைக்காட்சி நெறியாளர்களில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கான பிரதிநிதித்துவம் 11.1% ஆக இருக்கிறது. தாழ்த் தப்பட்டோர்கள், பழங்குடிகள் ஒருவர்கூட இல்லை. தொலைக்காட்சி விவாதங்களில் கருத்துக் கூற அழைக்கப் படுவோரின் பின்னணியும் இதை ஒட்டியே இருக்கிறது. இன்னும் மதரீதியாக நாம் ஆய்வுகளை மேற்கொண்டால் சிறுபான்மையினர் எந்த அளவுக்குப் புறக்கணிக்கப்படு கிறார்கள் என்பதும், முஸ்லிம்கள்மீதான வன்மமும் சிந்தனா ரீதியான ஒடுக்குமுறையும் அந்த ஆய்வில் வெளிப்படும். எல்லாவற்றிலுமே பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னும் மோசமான நிலையில் இருக்கும்.
இந்திய ஊடகங்கள் எவ்வளவு அக்கிரம மானவை என்பதை ஒரு பழங்குடியின் பார்வையிலிருந்து அணுகினால்தான் நாம் உணர முடியும். இந்த விஷயங்கள் எதுவும் தற்செயல் இல்லை. இந்தியாவின் சமூக அதி காரத்தில் ஆதிக்கம் செலுத்தும் சமூகங்களும், ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தும் சமூகங் களும் ஒன்றாக இருப்பது தற்செயல் இல்லை. யாருக்குப் பேசவும், எழுதவும் இடம் கிடைக் கிறதோ அவர்கள் நலனே முன்னுரிமை ஆகி றது. அவர்கள் எண்ணங்களே ஒட்டுமொத்தச் சமூகத்தின் கருத்துகளாக, முன்னுரிமைகளாக வளர்த்தெடுக்கப் படுகின்றன.
சமத்துவத்துக்கு சமூக நீதி எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும், இந்தியப் பின்னணியில் எல்லா இடங்களிலும் சமூகங்களுக்கான பிரதிநிதித்துவத்தை விழிப்புணர்வோடு பராமரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அறிவுத் துறைக்கு யாரும் வெளியிலிருந்து சொல்லிக்கொடுக்க வேண்டியது இல்லை. இது அவர்களுடைய தார்மிக அடிப்படைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். அதிலும் ஊருக்கெல்லாம் உபதேசத்தை அள்ளி வழங்கும் ஊடகங் கள் தம் மீது பல ஆண்டுகளாகத் தொடரும் விமர்சனங் களுக்குப் பிறகும், இவ்வளவு ஜாதியத்தோடு செயல்படுவது திமிர்த்தனம். ஊடக அதிபர்களை மட்டும் இதில் குற்றஞ்சாட்ட முடியாது; ஊடகங்களின் தலைமைப்பொறுப்புகளில் இருப்பவர்களும் சமமான அளவுக்குக் குற்றவாளிகள்.
ஆச்சர்ய முரண் என்னவென்றால், தொட்டதற்கெல்லாம் அரசியல் துறையைச் சாடுவதும், ‘மஹாயோக்கியர்’ வேஷம் கட்டுவதும் ஊடகத் துறையின் வழக்கம். சுதந்திர இந்தியாவில் சமூக நீதி மாற்றங்கள் அதிகம் நிகழ்ந்துவரும் துறைகளில் அரசிய ல் முன் வரிசையில் நிற்கிறது என்றால், ஊடகம் கடைசி வரிசையில் நிற்கிறது.
ஊடகங்கள் துளியேனும் வெட்கப்படவேண்டாமா?
மக்களுக்கும் இதில் பங்கு இருக்கிறது. தமக்கான ஊடகத்தை அவர்கள் தீர்மானிக்க வேண்டும். எல்லாத் தளங்களிலுமே கேள்வி கேட்பதன் வாயிலாகவே ஜன நாயகத்தை வளர்த்தெடுக்க முடியும். அரசியலில் எப்படி இன்றைக்கு மாற்றம் நடக்கிறது? அரசியல் கட்சிகளை நோக்கிக் கேள்வி கேட்பதன் வழியாகவும், திருந்தாத கட்சி களைத் தண்டிப்பதன் வழியாகவும் நடக்கிறது.
ஊடகங்களை நோக்கியும் இனி மக்களின் சாட்டை சுழலட்டும்!
நன்றி: சமஸ் ‘அருஞ்சொல்’ இணைய தளம்
19.10.2022
No comments:
Post a Comment