பதவி விலக தேவையில்லை - உயர்நீதிமன்றம் உத்தரவு
திருவனந்தபுரம்,அக்.25- 9 பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் தங்கள் பதவியை விட்டு விலக வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டது ஜன நாயக விரோதமானது, அதிகாரத்தின் மீதான அத்துமீறல் என முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்த நிலையில் கேரள உயர்நீதிமன்றம் துணைவேந்தர்கள் பதவி விலகத் தேவையில்லை என அதிரடியாக உத்தர விட்டுள்ளது.
பாஜக ஆளாத மாநிலங்களில் ஒன்றிய பாஜக அரசு ஆளுநர்கள் மூலம் போட்டி அரசை நடத்துவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. பாஜக அல்லாத எதிர்க்கட் சிகள் ஆளும் மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல் வேறு நெருக்கடிகளை கொடுத்து ஜன நாயகத்தையே கேலிக்கூத்தாகி வருகிறது. அதிலும், தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, பஞ்சாப் போன்ற மாநில ஆளுநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் போலவே செயல்பட்டு வருகின்றனர்.
ஆளுநர்களின் இந்த ஜனநாயக விரோதப் போக்குக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய நிலையில் கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது தொடர்பான விஷயங்களில் ஆளுநரின் செயல்பாடு காரணமாக மாநில அரசுடன் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டை போல கேரளத்திலும் துணை வேந்தர்களை நியமிப்பதில் ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு கேரளா ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், கேரளா, கண்ணூர், மகாத்மா காந்தி, காலடி சமஸ்கிருதம், அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக் கழகம் உள்பட 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உடனே தங்களது பதவியை விட்டு விலக வேண்டும் என்று ஆளுநர் ஆரிப் முகம்மது கான் உத்தர விட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
பல்கலைக்கழகங்களின் துணைவேந் தர்கள் விதிகளை மீறி நியமிக்கப்பட் டிருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டி ருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. அதே நேரம் தேர்வு குழுவின் பரிந்துரைப்படி பல்கலைக் கழக துணை வேந்தர்களை நியமித்ததே ஆளுநர்தான் என்ற நிலையில், தற்போது அவரின் இந்த நடவடிக்கை அரசுக்கு எதிரான போக்காகவே அர சியல் விமர்சகர்களால் பார்க்கப் படுகிறது.
முதலமைச்சர் பினராயி கண்டனம்
ஆளுநரின் இந்த அடாவடி போக்குக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ஆளுநர் ஆரிப் கான் துணை வேந்தர் பதவியை தவறாகப் பயன்படுத்தி, தனக்கு உள்ள அதிகாரங்களை விட அதிக அதிகாரங்களைப் பயன்படுத்து கிறார். இது ஜனநாயக விரோதமானது மட்டுமின்றி துணை வேந்தர்களின் அதிகாரத்தின் மீதான அத்துமீறல். ஆளுநர் பதவி என்பது அரசுக்கு எதிராக செயல்படுவதற்கல்ல, அரசிய லமைப்பின் கண்ணியத்தை நிலை நிறுத்துவதற்காக செயல்படுவது. ஆனால் ஆரிப் கான் ஆர்எஸ்எஸ்-சின் கருவியாக செயல்படுகிறார்" என விமர்சித்துள்ளார்.
உயர்நீதிமன்றம் தீர்ப்பு
இதற்கிடையே, கேரளாவில் 9 பல் கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தங்கள் பதவியிலிருந்து விலகுமாறு கேரளா ஆளுநர் கூறியதற்கு எதிரான மனு மீது கேரள உயர்நீதி மன்றத்தில் விசாரணை நேற்று (24.10.2022) மாலை சிறப்பு அமர்வில் நடைபெற்றது. இந்த நிலையில், நீதிபதி தேவன் ராமச்சந்திரன் தலைமையிலான அமர்வின் உத்தரவில் கூறியிருப்பதாவது, 9 பல்கலைக்கழகங் களின் துணை வேந்தர்கள் பதவி விலக தேவை யில்லை.இந்த விவகாரத்தில் ஆளுநர் இறுதி முடிவு எடுக்கும் வரை அவர்கள் அனைவரும் தங்கள் பதவியை தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment