திருச்சி அக்.7- திருச்சி மாவட்ட திரா விடர் கழக தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், ஞா.சகாயராஜ், ஞா. அலெக்சாண்டர், ஞா.ஜேம்ஸ், ஞா.சாக்ரடீஸ், அடைக்கல மேரி, ரெஜினாமேரி, விக் டோரியா, எலிசபெத் ராணி ஆகியோரின் தாயார் ஞா.இருதயமேரி கடந்த மாதம் 27.9.2022 அன்று உடல் நலக்குறைவால் மறை வுற்றார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் வி.எஸ். நகரிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று (அக்.6) காலை 11.30 மணிக்கு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு மறைந்த ஞா.இருதய மேரி படத்தினை திறந்து வைத்து நினைவுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார், மாநில அமைப்பு செயலாளர் உரத்தநாடு குணசேகரன், மதிமுக விவசாய அணி செயலாளர் புலவர் முருகேசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா , மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், திருச்சி மண்டல தலைவர் ப.ஆல்பர்ட், பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் பேராசிரியர் சுப்பிரமணியம், பெரியார் நூற்றாண்டு கல்வி நிறுவனங்கள் சார்பில் பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை ஆகியோர் உரையாற்றினார்கள்.
மேலும் இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட தலைவர் இரா.மோகன்தாஸ், லால்குடி மாவட்ட தலைவர் தே.வால்டேர், கழக தொழில்நுட்ப அணி செயலாளர் வி.சி. வில்வம், கழக பேச்சாளர் இராம.அன்பழகன், மதிமுக மாவட்ட செயலாளர் மணவை தமிழ் மாணிக்கம், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்சுடர், இளங்கோவன், காட்டூர் சங்கிலிமுத்து, காமராஜ், ராஜேந்திரன், பெல் ஆனந்தராஜ், கனகராஜ், லால்குடி மாவட்ட செயலாளர் அங்கமுத்து, முருகன், பாச்சூர் அசோகன், உடுக்கடி அட்டலிங்கம், போளூர் பன்னீர்செல்வம், பெரம்பலூர் நடராஜன், மகளிர் பாசறை தலைவர் அம்பிகா உள்ளிட்ட கழக தோழர்கள் பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment