சென்னை, அக்.30- தமிழ் நாடு அரசின் இணைய வழி சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த வாரம் கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவையில், இணையவழி சூதாட்டம் தடுப்பு மசோதா கூடுதல் ஷரத்துக்களுடன் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீது அனைத்து கட்சி சட்டமன்ற உறுப் பினர்களும் பேசியது டன், குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த மசோதா ஆளுநரின் ஒப் புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த மசோதா வுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளி யாகி உள்ளது. இதனை தொடர்ந்து, இந்த சட்ட மசோதா அரசிதழில் வெளியிடப்பட்டு விரை வில் சட்டமாக அமலுக்கு வரும். இணையவழி சூதாட்ட தடை சட்டம் மூலம், இணையவழி சூதாட்ட விளையாட்டு கள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக் கூடிய வாய்ப்புள்ள அனைத்து இணையவழி விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
Sunday, October 30, 2022
தமிழ்நாடு அரசின் இணையவழி சூதாட்ட தடை மசோதா: ஆளுநர் ஒப்புதல்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment