நீலமலை மாவட்ட கழக கலந்துரையாடலில் விடுதலை சந்தா இலக்கை முடிப்பதென தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

நீலமலை மாவட்ட கழக கலந்துரையாடலில் விடுதலை சந்தா இலக்கை முடிப்பதென தீர்மானம்

குன்னூர், அக். 29- நீலமலை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 28-.10.-2022 அன்று காலை 11 மணிக்கு குன்னூர் டாக்டர் இரா.கவுதமன் இல்லத்தில் நடைபெற்றது. 

பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பு செயலா ளர் ஈரோடு த.சண்முகம்  ஆகியோர் விடுதலை சந்தா சேர்ப்பில் இலகு வாக இலக்கை அடைவது எப்படி, கிராமப் பிரச் சாரம், அமைப்பு பணிகள் குறித்தும் விளக்கமாக உரையாற்றினர்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் எழுதிய "ஆர்.எஸ். எஸ் எனும் டிரோஜன் குதிரை" நூல் அறிமுக கூட்டங்களை பொது வெளியில்  நடத்தி மக்களி டையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனவும், நீலமலை கழக மாவட்டத் தில் உள்ள குன்னூர், உதகமண்டலம், கூடலூர் உள்ளிட்ட  3 சட்டமன்றத் தொகுதிகளில் ஆதரவா ளர்கள் தோழமை இயக் கத்தினர் சட்டமன்ற மற் றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரையும் சந்தித்து விடுதலை சந்தா இலக்கை முடித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் 90-ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசாக வழங்கி மகிழ்வது என வும்,  டிசம்பர்-2 சென்னை யில் நடைபெறும் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவிலும், டிசம்பர்-17 திருப்பத்தூரில் நடை பெறும் முப்பெரும் விழா விலும் குடும்பத்துடன்  பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யபட்டது.

திராவிடர் கழக மருத் துவரணி மாநிலத் தலை வர் டாக்டர் இரா.கவுத மன், மாவட்டச் செயலா ளர் மு.நாகேந்திரன், இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் 

சா.லோகநாதன், மாவட்டத் துணைத் தலைவர் சந்தியேத்திரன், மாவட்ட இளைஞரணி செயலா ளர் ஜீவா, மாவட்ட மக ளிர் பாசறை அமைப்பா ளர் எம்.சண்முகசுந்தரி, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் பி.ஈஸ்வ ரன், யா.பிரேம்குமார் உள்ளிட்ட கழகத்தோழர் கள் கலந்துகொண்டு  கூட் டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத் திட உழைப்போம் என உற் சாகமாக உரையாற்றினர்.

No comments:

Post a Comment