இலவசத் திட்டங்கள்: தேர்தல் ஆணையத்தின் தலையீடு தேவையற்றது தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 24, 2022

இலவசத் திட்டங்கள்: தேர்தல் ஆணையத்தின் தலையீடு தேவையற்றது தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு!

புதுடில்லி, அக். 24 - இலவசத் திட்டங்கள், அரசின் கொள்கை, கோட்பாடுகளில் தேர்தல் ஆணையம் தலையீடு தேவை யற்றது என்று தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இலவசத் திட்டங்களை அறிவிப்பதில் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு தி.மு.க., ஆம் ஆத்மி , சி.பி.எம். சிரோன்மணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இவைசத் திட் டங்களை தேர்தல் அறிக்கையில் அறிவிக்கும் போது அதற்கான நிதிச்செலவு உள்ளிட்ட விவரங் களையும் தெரிவிக்கும் வகையில் உரிய விதி முறைகளை வெளியிட வேண்டும் என்ற கட்டுப் பாட்டை கொண்டு வர தேர்தல் ஆணையம் திட்ட மிட்டுள்ளது.

இது தொடர்பான கருத் துக்களை தெரிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிகளுக்கும் கடிதம் எழுதியிருந்தது. இதற்கு தி.மு.க.. ஆம் ஆத்மி உள்ளிட்ட 5 கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

இலவசத் திட்டங்கள் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண் டியதில்லை. அப்படி தலையிடுவது அரசின் கொள்கை யிலும், கோட் பாடுகளிலும் தேர்தல் ஆணையம் தலையிடுவ தாக மாறிவிடும் என்றும், அது மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதை முடக்கு வதாக மாறி விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல வசங்கள் தொடர்பான வழக்கு உச்சந்திமன்றத்தில் நிலு வையில் உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் தலையீடு தேவையற்றது என்றும், இவைகளை கட்டுப்படுத்தும் முயற்சியை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சி அரசியல் கட்சிகள் மீதான உரிமை மீறல் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித் துள்ளது.

இதனிடையே, தேர்தல் ஆணையத்தைத் தொடர்ந்து இலவசத் திட்டங்களை செயல் படுத்துவதற்கு சி.ஏ.ஜி.யும் முட்டுக்கட்டை போட தயா ராகியுள்ளது.

No comments:

Post a Comment