அய்தராபாத்,அக்.6- பாலியல் வன்முறை வழக்கில் சிக்கிய சிறுவர்களை பெரியவர்களாகக் கருதி தண் டனை வழங்கலாம் என அய்தராபாத் சிறார் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த மே 28ஆம் தேதி, 17 வயது சிறுமியொருவர், தனது நண்பருடன் பார்ட்டியொன்றுக்கு சென்றுள்ளார். அப்போதுஅங்கிருந்த சிலர் அச்சிறுமியை வீட்டில் இறக்கி விடுவதாக கூறிவிட்டு, மறைவான ஓர் இடத்திற்கு அச்சிறுமையை கடத்திச்சென்று, அங்கு வைத்து பாலியல் வன்முறை செய்துள்ளனர்.
இந்த நிகழ்வில் 6 பேர் மீது கூட்டு பாலியல் வன்முறை வழக்கு பதியப்பட்டது. இந்த ஆறுபேரில் அய்ந்து பேர் 18 வயது நிரம்பாதவர்கள். இவர்களில் ஒரு சிறுவன், சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் அந்த சட்டமன்ற உறுப்பினர் தன் மகனுக்கும் இந்த குற்றத்துக்கும் தொடர் பில்லை எனக் கூறிய நிலையில், பின்னர் அது நிரூபிக் கப்பட்டதால், காவல்துறையினர் அச்சிறுவனின் பெய ரையும் குற்றவாளிகள் பெயரில் சேர்த்துக் கொண்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த அய்ந்து பேரில் நான்கு பேரை, பெரியவர்களாகக் கருத்தில் கொண்டு விசாரணையை தொடரலாம் என அய்தராபாத் சிறார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
சிறார் நீதிச்சட்டம் 2015ஆம் திருத்தச் சட்டத்தின்படி, 16 வயதை தாண்டிய சிறுவர்கள் எவரேனும் கொடூர மான குற்றத்தை செய்திருந்தால், அவர்களை பெரிய வர்களாக கருத்தில் கொண்டு விசாரணை நடத்தலாம் என்ற சட்டப்பிரிவை பயன்படுத்தி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment