தந்தை பெரியாரை சிறுவர்களுக்கு அறிமுகம் செய்யும் நூல் ‘பெரியார் தாத்தா'. நூற்றுக்கணக்கான வண்ணப் படங்கள், வளவளப்பான தாளில்,
காமிக்ஸ் போல அச்சிடப்பட்ட புத்தகம். ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய புத்தகம்! தம்பி அருண்.மோ எழுதிய ‘பெரியார் தாத்தா', நூல் நேற்று (24.10.2022) மாலை சென்னையில் (ஓட்டல் பாம் ஷோர்ஸ், அசோக் நகர்) வெளியிடப்பட்டது. சுற்றுச் சூழலை மய்யமாக வைத்து, தந்தை பெரியார் குழந்தையிடம் கூறுவதுபோல், அழகிய வண்ண ஓவியங்களுடன் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
நூல் அறிமுக விழாவில் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு தலைவர் தோழர்.கே.பாலகிருஷ்ணன் நூலை வெளியிட்டார். விழாவில், ஊடகத்துறையின் தோழர் கார்த்திகை செல்வன், இயக்குநர் வசந்த் பாலன், ஒளிப்பதிவாளர் பி.சி.சிறீராம், நடிகை பாத்திமா பாபு உள்ளிட்ட திரைப்பட கலைஞர்கள், அ.இ. பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இந்நூல் சிறுவர்கள் அனைவரின் கரங்களில் தவழ வேண்டிய நூலாகும்.
தங்களது குழந்தை மகிழ் மாறன் முதலாம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடும் விழாவில், ‘பெரியார் தாத்தா' எனும் நூல் வெளியிட முடிவு செய்த தம்பி அருண்.மோ மற்றும் அவரது வாழ்விணையர், இருவரும் நமது பாராட்டுக் குரியவர்கள்.ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் இந்த நூல் வெளியிடப்பட்டால், இந்தியா, ஏன் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
தொடர்பு எண்: 98406-44916
No comments:
Post a Comment