எங்கள் ‘புனித' நாள் அன்று இறைச்சிக்கடையை ஏன் திறந்தாய்? கடையை உடைத்த ஹிந்து முன்னணியினர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 6, 2022

எங்கள் ‘புனித' நாள் அன்று இறைச்சிக்கடையை ஏன் திறந்தாய்? கடையை உடைத்த ஹிந்து முன்னணியினர் கைது

கோவை, அக்.6  இறைச்சிக் கடைகள் தொடர்ந்து ஹிந்துத்துவ அமைப்பினரால் தாக்கப்படுவது வட இந்தியாவில் தொடர் நிகழ்வாக உள்ளது. தற்போது தமிழ்நாட்டிலும் அவர்கள் தங்களின் ரவுடித்தனத்தை காட்ட துவங்கி உள்ளனர்.

கோவை மாவட்டம் பிரஸ் காலனி 

பி.எஸ்.ஜி. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சிக்கந்தர் (வயது 32). இவர் பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள இந்திரா காந்தி வணிக வளாகத்தில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அங்கு வந்த 3 பேர் ஹிந்துக்களின் ‘புனித' நாள், அன்று எப்படி இறைச்சிக் கடையைத் திறக்கலாம்; இதனால் எங்களின் உணர்வு பாதிக்கப்படுகிறது என்று கூறி கடையை சேதப்படுத்தி, தகராறில் ஈடு பட்டனர். 

இதுகுறித்து சிக்கந்தர், பெரியநாயக்கன் பாளையம் காவல்துறையில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் நிகழ் விடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அதில் கடையை சேதப்படுத்தியது பெரியநாயக்கன்பாளையம் ஹிந்து முன்னணி பொதுச்செயலாளர் சண்முகம் (40), ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர் வினோத் (22), ஹிந்து முன்னணி ஒன்றிய தலைவர் முருகன் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.


No comments:

Post a Comment